Nelson: அல்லு அர்ஜுனுடன் இணையும் நெல்சன்... அப்போ விஜய் - சன் பிக்சர்ஸ் கூட்டணி என்னாச்சு..?

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர், ஆகஸ்ட் மாதம் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யுடன் நெல்சன் இணையலாம் என சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது நெல்சன் டோலிவுட் மாஸ் ஹீரோவின் படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

Nelson: Nelson - Allu Arjun Combo Joint Action Film... AA 23 Official Announcement Coming soon

நெல்சனின் டோலிவுட் என்ட்ரி
விஜய் டிவியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்து சினிமாவில் அறிமுகமானவர் நெல்சன். முதலில் சிம்பு நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார். ஆனால், இந்தப் படம் ஆரம்பித்த வேகத்திலேயே ட்ராப் ஆனது. இதனையடுத்து நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நெல்சன்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கினார். டாக்டர் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தாலும், விஜய்யின் பீஸ்ட் நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், கோலிவுட்டில் இந்தாண்டின் இன்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது ஜெயிலர்.

மேலும், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால், சூப்பர் ஸ்டார் ரஜினியோடு நெல்சனும் தாறுமாறாக கம்பேக் கொடுத்தார். ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக நெல்சனுக்கு 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார் பரிசாக கொடுத்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். அதோடு நெல்சனின் அடுத்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக சொல்லப்பட்டது.

அதன்படி நெல்சன் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. தளபதி 68 ஷூட்டிங் முடியும் நேரம், விஜய் - நெல்சன் காம்போ குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது டோலிவுட் மாஸ் ஹீரோவுடன் இணைய முடிவு செய்துள்ளாராம் நெல்சன்.

அதன்படி, புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தனது அடுத்தப் படத்தில் நெல்சனுடன் இணையவுள்ளாராம். இந்தப் படம் 200 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அல்லு அர்ஜுனின் 23வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X