Nelson: "லோகேஷ் கிட்ட ஏற்கனவே கதை சொல்லிட்டேன்... விக்ரம் தான் ஜெயிலரோட Continuity..” நெல்சன் ஓபன்!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அதேநேரம் ஜெயிலர் ஸ்டோரி லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் தொடர்ச்சி போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், விக்ரம் தான் ஜெயிலர் படத்தின் Continuity என்பதாக நெல்சன் விளக்கம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

விக்ரம் தான் ஜெயிலரோட Continuity
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியின் ஃபேன்பாய் சம்பவமாக ஜெயிலர் அமைந்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது.
இதனையடுத்து ஜெயிலர் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலநிதி மாறன் தாறுமாறாக செலிப்ரேட் செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், ராக்ஸ்டார் அனிருத் மூவருக்கும் தலா 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை அன்பளிப்பாக கொடுத்து அசரடித்தார். இதனிடையே ஜெயிலர் படத்தின் கதை குறித்து நெட்டிசன்கள் அதிகளவில் ட்ரோல் செய்து வந்தனர். ஜெயிலர் படத்தில் ரிட்டையர்டு ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ரஜினி.
மேலும், தனது மகனை கடத்திய வில்லன்களுடன் மோதுவது தான் தலைவரின் டாஸ்க். கிட்டத்தட்ட இதேபோன்ற கதையில் தான் விக்ரம் படமும் உருவாகியிருந்தது. அதாவது தனது மகனை கொலை செய்த வில்லன்களை பழிவாங்குவார் ஏஜென்ட் விக்ரம் (கமல்). ஆகமொத்தம் விக்ரம் பட கதையை கொஞ்சம் ஆல்டர் செய்து ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், அதுபற்றி இயக்குநர் நெல்சன் விளக்கம் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. விக்ரம் படத்தின் ஷூட்டிங் முன்பே ஜெயிலர் கதையை லோகேஷிடம் சொல்லிவிட்டேன். ஆனால் விக்ரம் வெளியான போது லோகேஷும் தன்னிடம் படம் பார்க்குமாறு கூறியிருந்தார். விக்ரம் பார்த்த பின் அதுவும் ஜெயிலர் பட கதை போலவே இருந்தது. ஆனாலும் நிறைய வித்தியாசம் இருந்ததால் ஜெயிலர் கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றுள்ளார்.

அதேபோல், லியோவில் இடம்பெற்ற ஹைனா சீனும் நெல்சனின் ஐடியா என்றே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். முன்னதாக லியோ படத்தின் கதையை ரஜினியிடம் லோகேஷ் சொன்னதாகவும், அதிலிருந்த ஒரு சீன் தான் ஜெயிலரில் இடம்பெற்றதாகவும் சொல்லப்பட்டது. இதனால் தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் விலகவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











