Jailer: ப்ளூ சட்டை மாறனுக்கும் ஒரு சீன்.. ஜெயிலரில் வச்சு செய்த நெல்சன்.. விமர்சகரோட ரியாக்ஷன்?
சென்னை: கடந்த சில வாரங்களாகவே ஜெயிலர் படத்தை மரண கலாய் கலாய்த்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஜெயிலர் படத்திலேயே இயக்குநர் நெல்சன் தரமான பதிலடி கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் போட்டுள்ள கமெண்ட்டுக்கு ப்ளூ சட்டை மாறனே ரியாக்ட் செய்திருக்கிறார்.
ஜெயிலர் படத்தில் விக் காமெடியை வைத்ததற்காக நெல்சன் நம்ம புள்ள என்றும் கையை கொடு சகல என்றும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டி ட்வீட் போட்டிருந்த நிலையில், உங்களையும் அவர் போற போக்கில பொளந்துக் கட்டியிருக்காரு என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தில் ஹீரோவாக வரும் சுனில் விமர்சகர் ஒருவரை கட்டி வைத்து செய்யும் அந்த தரமான சம்பவம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
பீஸ்ட் படத்துக்கு வந்த ட்ரோல்: விஜய் டிவியில் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நிலையில், டாக்டர் படம் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்து மாஸ் காட்டினார்.

விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி 200 கோடி வசூல் வேட்டை நடத்தினாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதை படு மோசம் என பலராலும் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் மன ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தார். சினிமா விழாக்களில் கூட ரஜினி படத்தை இயக்கி வரும் இயக்குநர் என்கிற மதிப்புக் கூட இல்லாமல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ப்ளூ சட்டையை வச்சு செய்த நெல்சன்: ஜெயிலரில் இரண்டாம் பாதியில் கதை ஆந்திராவுக்கு செல்லும் நிலையில், ஹீரோவாக வரும் சுனில் நடிகை தமன்னாவை காதலிப்பது போன்ற மொக்கை காட்சிகளுக்கு மத்தியில் சுனிலின் படத்தைப் பற்றி தப்பாக விமர்சனம் செய்த ஒரு விமர்சகரை அதிலும் அவர் ப்ளூ கலர் டாட்ஸ் போட்ட சட்டையை அணிந்து கொண்டிருப்பார்.

படம் பண்ண அட்வான்ஸ்: விமர்சகரை கட்டிவைத்து வெளுக்காமல் 10 லட்சம் ரூபாய் செக்கை அட்வான்ஸாக கொடுத்து என் அடுத்த படத்தை நீ பண்ணு, ஆனால், ஒருத்தனும் நெகட்டிவ் விமர்சனம் சொல்லக் கூடாது. சொன்னால், உன்னை அவ்ளோ தான் என போட்டு பொளந்திருக்கிறார் நெல்சன்.

ப்ளூ சட்டை ரியாக்ஷன்: ரஜினிகாந்தை டைனோசர்ஸ் என நெல்சன் படத்தின் ஆரம்பத்திலேயே மாஸ் காட்டியிருந்த நிலையில், டைனோசர்ஸ் படிமத்தை பார்க்கும் காட்சியை பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருந்தார். அந்த ட்வீட்டுக்கு கீழ் உனக்கும் ஒரு சீன் வச்சிருக்காரு நெல்சன் என ரசிகர்கள் கமெண்ட் போட "வச்சாலும் பருப்பு வேகாது" என ப்ளூ சட்டை மாறன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











