ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அடுத்து நெல்சன் அந்த சூப்பர்ஸ்டாரை தான் இயக்கப் போறாரா?
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியுள்ள நிலையில், நெல்சன் அடுத்து எந்த நடிகரை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி தான் சினிமா வட்டாரத்தில் பெரிதாக எழுந்துள்ளது.

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை முடித்த நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என உறுதியளித்துள்ளதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்திய பேட்டியில் நெல்சன் மற்றும் விஜய் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், உடனடியாக அது நடக்க வாய்ப்பில்லை என்றும் அடுத்து நெல்சன் இந்த சூப்பர்ஸ்டாரை தான் இயக்கப் போகிறார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேடி சூப்பர்ஸ்டார்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில், அதன் பின்னர் அவர் சோலோவாக நடித்த பல உமன் சென்ட்ரிக் படங்கள் சொதப்பி வரும் சூழ்நிலையில், மீண்டும் இயக்குநர் நெல்சன் நயன்தாராவை இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கோலமாவு கோகிலா 2: அதுவும் கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை தான் நெல்சன் இயக்கப் போகிறார் என்கின்றனர். நடிகை நயன்தாராவும் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ரெடியாக இருப்பதாகவே கூறுகின்றனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை நயன்தாரா அன்னபூரணி மற்றும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், மீண்டும் ஒரு உமன் சென்ட்ரிக் படத்திலேயே தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். கமலுக்கு ஜோடியாக மணிரத்னத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி என்கிற தகவல்களும் அதிகம் பரவி வருகின்றன.

தனுஷ் நெல்சன் கூட்டணி: நயன்தாரா படம் வொர்க்கவுட் ஆகவில்லை என்றால் தனுஷை நெல்சன் இயக்குவார் என்றும் அதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே ஓடிக் கொண்டிருப்பாதாகவும் விரைவில் நெல்சனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சம்பளம்: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சன் கிட்டத்தட்ட 40 முதல் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும் மீண்டும் பழையபடி அவர் கம்மி பட்ஜெட் படத்தை இயக்குவாரா? என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. முன்னதாக அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் படங்களை நெல்சன் இயக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











