பீஸ்ட்டில் விஜய்யின் கேரக்டர் பெயர்... நெல்சன் வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது பீஸ்ட். இந்தப் படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அவர்களை மேலும் காத்திருக்க வைக்காமல் இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவர். இவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்து விடும். தன்னுடைய படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை தனக்கு சொந்தமாக்கி கொண்டவர் விஜய். இவரது இந்த வெற்றி எளிதில் பெறப்பட்டதல்ல. இதற்காக அவர் கடந்துவந்த கரடுமுரடான பாதைகள் ஏராளம்.

விஜய்யின் பீஸ்ட் படம்
தன்னுடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும்வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய். கடந்த அவரது மாஸ்டர் படம் வித்தியாசமான கோணத்தில் அவரை வெளிப்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் அதிகமான எதிர்பார்ப்பை உண்டு செய்துள்ளது.

ரசிகர்களின் தொடர் கோரிக்கை
படம் சூட்டிங் துவங்கியதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து படத்தின் அப்டேட்டை கேட்டு தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்சை துளைத்து எடுத்தனர். சன் பிக்சர்சும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்கள், தகவல்கள் என ரசிகர்களை தொடர்ந்து என்கேஜ் செய்து வந்தது.

சூப்பர் பாடல்கள்
அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கோடிக்கணக்கான வியூஸ்களை கடந்து சென்று வருகிறது. லிரிக் வீடியோவாக வெளியான நிலையில், பாடல்களில் விஜய்யின் உற்சாகம் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பாடல்களில் உற்சாகமான விஜய்யை பார்க்க முடிந்தது.

விஜய்யின் கேரக்டர் பெயர்
இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் தகவல்களை வார இதழ் ஒன்றில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் பகிர்ந்துக் கொண்டுள்ளார். படத்தில் ரா ஏஜெண்ட்டாக விஜய் நடித்துள்ளார். அவரது கேரக்டர் பெயர் வீரராகவன். அனைவரும் அவரை வீரா என்று அழைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











