அரபிக் குத்து பாட்டுக்கு பீஸ்ட் இயக்குநர் நெல்சன் மகன் போட்ட குத்தாட்டம்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: பூஜா ஹெக்டே, அனிருத், சமந்தா, அபர்ணா தாஸ் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே பொதுமக்களை போல அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் சமீபத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான நிலையில், உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

50 மில்லியன்

50 மில்லியன்

ஹலமிதி ஹபிபோ என சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் குரலில் வித்தியாசமாக ஆரம்பிக்கும் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து லிரிக் வீடியோ காதலர் தினத்தன்று வெளியானது. 3 நாட்களில் 50 மில்லியன் வியூக்களை இந்த பாடல் நெருங்கி உள்ளது. தற்போது வரை 48 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த பாடல் அள்ளி உள்ளது.

பூஜா முதல் சமந்தா வரை

பூஜா முதல் சமந்தா வரை

விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடனமாடிய நிலையில், தனியாகவும் ஒரு ஆட்டத்தை ஆடி அதன் ரீலையும் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவை தொடர்ந்து நமீதா மாரிமுத்து, அபர்ணா தாஸ், அனிருத் என ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து நடிகை சமந்தா போட்ட அரபிக் குத்து சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

அரபிக் குத்து பார்த்த மூதாட்டி

அரபிக் குத்து பார்த்த மூதாட்டி

மருத்துவமனையில் மூக்கில் ட்யூப் எல்லாம் மாட்டிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் வயதான மூதாட்டி ஒருவர் அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோவையும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து நெகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இயக்குநர் நெல்சன் மகனே அந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

நெல்சன் மகன் நடனம்

நெல்சன் மகன் நடனம்

சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏகப்பட்ட பேர் ஹலமிதி ஹபிபோ என இடுப்பை இஷ்டத்துக்கு ஆட்டி வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சனின் மகனான ஆத்விக் அட்டகாசமாக போட்டுள்ள நடன வீடியோவை நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வாவ் சொன்ன தர்ஷன்

கனா படத்தில் 'ஒத்தையடி பாதையிலே' என நடனமாடி அறிமுகமான நடிகர் தர்ஷன் இயக்குநர் நெல்சனின் மகன் ஆத்விக்கின் அரபிக் குத்து நடனத்தை பார்த்து ‘வாவ்' என ஃபயர் எமோஜிக்களை போட்டு கமெண்ட் செய்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் நெல்சன் மகனின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல வீஜே... பூஜாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலிருக்கே!
மனைவியும் மகனும்

மனைவியும் மகனும்

சமீபத்தில் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா மற்றும் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது ஆத்விக் நடனமாடி உள்ள அரபிக் குத்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை போடப் போகிறார்களோ என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X