விஜய்யிடம் போட்டுக் கொடுத்துட்டாங்க... அவர் சொன்ன பதில்...நெகிழ்ந்து போனேன்...நெல்சன் பளீச்

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன். இந்தப் படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் படம் வசூல்மழை பொழிந்து வருகிறது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக வெளியான படம் பீஸ்ட். இந்தப் படம் இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

ரூ. 200 கோடி வசூல் சாதனை

ரூ. 200 கோடி வசூல் சாதனை

ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆனால் கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் பெற்றுள்ளது. இதனால் படக்குழு மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

நெல்சனுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள்

நெல்சனுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள்

இந்தப் படம் நெல்சனுக்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றுத் தந்துள்ளது. அதிகமான கொண்டாட்டத்திலும் எதிர்பார்ப்பிலும் பீஸ்ட் படத்தை வரவேற்ற ரசிகர்கள், படத்தின் மேக்கிங் மற்றும் காட்சி அமைப்புகளால் நொந்து போயுள்ளனர். அவரது முந்தைய படங்கள் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட இந்தப் படம் ஏற்படுத்தவில்லை என்று கூறிவருகின்றனர்.

மோசமான திரைக்கதை

மோசமான திரைக்கதை

முந்தைய படங்களில் நயன்தாரா, சிவகார்த்திகேயனை வைத்து சிறப்பாக கதைக்களத்துடன் படங்களை இயக்கியிருந்த நெல்சன், விஜய் போன்ற மாஸ் ஹீரோவிற்கு மிகுந்த மெனக்கெடலுடன் திரைக்கதையை தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் குறித்து நெல்சன்

விஜய் குறித்து நெல்சன்

இந்நிலையில் நெல்சனின் சமீபத்திய பேட்டியில் படம் குறித்தும் விஜய் மற்றும் சூட்டிங் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளார். சூட்டிங்கிற்கு விஜய் தினந்தோறும் காலை 7.30 மணியளவில் வரும் நிலையில், தான் எப்போதுமே தாமதமாக ஆனால் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாக வருவதை மற்றவர்கள் விஜய்யிடம் கூறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யிடம் பேசிய நெல்சன்

விஜய்யிடம் பேசிய நெல்சன்

இதுகுறித்து தெரிந்துக் கொண்ட தான், நேரிடையாக விஜய்யிடமே தன்னுடைய தாமதம் குறித்து கேட்டதாகவும், அவர், அதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் எப்போது வந்தாலும் வேலை தாமதமின்றி நடைபெறுவதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்ததாக நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்த மரியாதை

அதிகரித்த மரியாதை

இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மீதான தனது மரியாதை பன்மடங்கு உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு முழுமையான சுதந்திரம் இருந்ததையும் தான் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் வேண்டுமென்றே அவ்வாறு வருவதில்லை என்றும் தனது இயல்பு அது என்றும் விஜய் புரிந்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil
டாக்டர் படத்தை 2 முறை பார்த்த விஜய்

டாக்டர் படத்தை 2 முறை பார்த்த விஜய்

டாக்டர் படத்தை விஜய் இரண்டு முறை பார்த்ததாகவும் சூப்பர் என்று தனக்கு பாராட்டை தெரிவித்ததாகவும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தான் இயக்குநர் ஸ்ரீதரின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவரது படங்களின் ஒவ்வொரு காட்சிகளும் தன்னை மிகவும் வசீகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X