ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை.. தளபதி 65 இயக்குநர் வெளியிட்ட சூப்பர் பிக்ஸ்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: தளபதி 65 படத்திற்காக ரஷ்யாவில் லொகேஷன் தேடி வருகிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் நெல்சனுக்கு ஜாக்பாட் அடித்தது போல தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு

பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ, பிரபாஸின் ராதே ஷ்யாம் என கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே தான் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாக உள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வமாக நாயகி குறித்து படக்குழு அறிவிக்கவில்லை.

செம ஸ்டைலில்

செம ஸ்டைலில்

சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் தனது அடுத்த பட இயக்குநர் நெல்சன் தான் என செம ஸ்டைலில் விஜய் அறிமுகப்படுத்திய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் யாரெல்லாம் நடிக்கிறாங்க உள்ளிட்ட அப்டேட்களை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

ஹியூமர் சென்ஸ்

ஹியூமர் சென்ஸ்

இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு இயற்கையாகவே ஹியூமர் சென்ஸ் அதிகம். நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் இந்த மாதம் வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் பாடல்களுக்கு அவர் செய்துள்ள புரமோஷன்களே அதற்கு சாட்சி. தளபதி 65 எப்படி வரப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எகிறிப் போயுள்ளது.

ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை

ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை

பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் இந்தியாவிலேயே படமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் சர்வதேச அளவில் தளபதி விஜய் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. அதற்கான லொகேஷன் வேட்டையில் தற்போது தான் ஈடுபட்டு இருப்பதாக இயக்குநர் நெல்சன் ஒரு பெரிய தூண் மீது குதிரையில் இருக்கும் வீரனின் போட்டோவை போட்டு ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

ரஷ்யாவில் லொகேஷனை இயக்குநர் உறுதி செய்த உடனே அடுத்த மாதம் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவுக்கு படப்பிடிப்புக்காக பறக்க உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் தரமான அப்டேட்கள் கிடைக்கும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X