அதுதான் உங்க மூஞ்சிலேயே தெரியுதே.. கமல் சார் பங்கமா கலாய்த்தார்.. ரஜினி பற்றியும் பேசிய நெல்சன்!
சென்னை: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒன்றாக வந்து கலந்துக் கொண்டனர். இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் பேக் ஸ்டேஜில் தான் இருந்தது பற்றியும் இன்று இந்த ஸ்டேஜில் இருப்பது குறித்தும் பேசியுள்ளார்.
கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வெற்றி கொடுத்த லோகேஷ் கனகராஜும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ராஜ் கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரம் 3 படத்தையும் விரைவில் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை அடுத்து இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் கைதி 2, ரோலக்ஸ் உள்ளிட்ட படங்களையும் இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அனிருத் அலப்பறை: சோஷியல் மீடியா முழுவதுமே அனிருத் இந்தியன் 2 படத்துக்கு இசையமைத்த கதறல்ஸ் பாடல் நல்லா இருக்கா? இல்லையான்னு என்கிற விவாதங்கள் தான் அதிகரித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் கவலைப்படாமல் அனிருத் ரசிகர்கள் கம்பேக் இந்தியன் மற்றும் கதறவிடுறாரே தாத்தா பாடலுக்குத்தான் வைப் செய்து வருகின்றனர். இசை வெளியீட்டு விழாவிலும் ராக் ஸ்டார் அனிருத் தனது குழுவினருடன் இந்தியன் 2 பாடல்களுக்கு லைவாக பர்ஃபார்மன்ஸ் செய்தார்.
கமல் மாஸ் என்ட்ரி: இந்தியன் தாத்தா போன்று உடையணிந்திருந்த இளைஞர்கள் மத்தியில் கமல்ஹாசன் கெத்தாக வந்து இறங்கி விழா மேடைக்கு நடந்து வந்தார். இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழா படத்துக்கான ஹைப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, சிவகார்த்திகேயன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்சன் பேச்சு: இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கிக் கொண்டு பேக் ஸ்டேஜில் தான் இருந்தேன் என்றும் இந்தியன் 2 படத்தை பற்றி கமல் சார் நிறைய விஷயங்களை சொல்வார். எனக்கு நீங்க சொல்றவங்க யாருமே தெரியல சாருன்னு சொன்னேன். அதான் உங்க மூஞ்சியிலேயே தெரியுதே என கலாய்த்தார். கமல் சார் என்னை கலாய்த்தார் என நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தேன் என நெல்சன் பேசினார்.
ரஜினிகாந்த் மறைமுகமாக சொன்ன மேட்டர்: ஜெயிலர் படத்தை இயக்கும் போது ரஜினி சார் அடிக்கடி ஷங்கர் சார் பற்றியும் அவரது இயக்கம் பற்றியும் உயர்வாக சொல்லிக் கொண்டே இருப்பார். ரஜினி சார் மறைமுகமாக எனக்கு நீயும் ஷங்கர் சார் மாதிரி நல்லா டைரக்ட் பண்ணுனு சொல்றாரு என்பதை புரிந்துக் கொண்டேன் என பேசியுள்ளார். நெல்சன் விரைவில் கமல்ஹாசன் படத்தை இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்கி முடித்த பின்னர் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கவின் நடித்து வரும் பிளடி பெக்கர் படத்தை நெல்சன் தயாரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











