நயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்?: நெல்சன் விளக்கம்

By Siva

சென்னை: சிம்பு, நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி பேசியுள்ளார் இயக்குனர் நெல்சன்.

நெல்சன் இயக்கத்தில் போதைப் பொருள் விற்கும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

நயன்தாராவுக்கு பெரிதாக மேக்கப், காஸ்ட்யூம் செலவு எதுவும் இல்லாமல் எளிமையாக காட்டியுள்ளார்கள். இந்நிலையில் படம் குறித்து நெல்சன் கூறியதாவது,

நயன்தாரா

நயன்தாரா

சிம்புவுடனான வேட்டை மன்னன் படம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. அதில் இருந்து வெளியே வர கஷ்டப்பட்டேன். கோலமாவு கோகிலா திரைக் கதையை 6 மாதங்களில் எழுதி முடித்தேன். நயன்தாராவிடம் கதை சொன்ன உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். கோலமாவு கோகிலா கிரைம், காமெடி எல்லாம் கலந்த கலவை.

ஹீரோயின்

ஹீரோயின்

போதைப் பொருள் விற்பவராக ஒரு ஹீரோவை வைத்து இந்த படத்தை நான் எடுத்திருந்தால் அது வழக்கமான படமாக ஆகியிருக்கும். ஹீரோயினை போதைப் பொருள் விற்க வைத்துள்ளது வித்தியாசமானது. நான் கதை எழுதியபோதே ஹீரோயினை மையமாக வைத்தே எழுதினேன். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள இந்த துறையில் ஹீரோயினை மையமாக கொண்ட கதையை படமாக்கி ரசிகர்களை திருப்திபடுத்துவது எளிது அல்ல.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

எங்கள் படத்தில் பாடல்கள் கதையுடன் தொடர்புடையவையாகவே இருக்கும். ரிலீஸுக்கு முன்பு அதை கூறுவது தவறாகிவிடும். அதனால் ஒரிஜினல் வீடியோவை வெளியிட முடிவு செய்தோம். எடிட்டிங்கின் இறுதிகட்டத்தில் அனைத்திலும் கவனம் செலுத்த எனக்கு கடினமாக இருந்தது. அதனால் இரண்டு வீடியோக்களை இயக்கும் வேலையை மற்றொரு இயக்குனரிடம் அளிக்க முடிவு செய்தோம். விக்னேஷ் சிவன் எனக்கும், அனிருத்துக்கும் நண்பர் என்பதால் அவரை கேட்டோம், உடனே சம்மதித்துவிட்டார். இது டீம் ஒர்க் என்றார் நெல்சன்.

ரிலீஸ்

ரிலீஸ்

கோலமாவு கோகிலா படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. யோகி பாபு நயன்தாராவுக்கு ரூட் போடும் காட்சிகள் ஏற்கனவே மக்களிடையே பெரிய ஹிட். படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் செமயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவுக்கு மேலும் ஒரு ஹிட் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X