தலைவர் 169 படத்திற்கு எக்ஸ்ட்ரா டைம் கேட்கும் நெல்சன்... சூட்டிங் எப்போ துவங்குதுன்னு பாக்கலாமா!
சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். அடுத்ததாக சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்
கடத்தலை மையமாக கொண்டு கோலமாவு கோகிலா என்ற படத்தை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின்மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். படத்தில் வித்தியாசமான முயற்சியாக யோகிபாபுவை ஹீரோவாக்கியிருந்தார். இதன்மூலம் வித்தியாசமான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

டாக்டர் படம்
இதையடுத்து தனது நீண்டநாள் நண்பரான சிவகார்த்திகேயனை டாக்டர் படத்தின்மூலம் இயக்கியிருந்தார். இந்தப் படத்திலும் மனித கடத்தலை மையமாக கொண்டே உருவாகியிருந்தது. இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அவரை வித்தியாசமாகவும் காட்டியிருந்தார் நெல்சன்.

விஜய்யின் பீஸ்ட் பட வாய்ப்பு
இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மற்றும் தீம் பாடல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தலைவர் 169 படத்தை இயக்கும் நெல்சன்
பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு தற்போது தலைவர் 169 என்று பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் ரிலீசுக்கு பிறகு இந்தப் படத்தில் நெல்சன் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் தலைவர் 169 சூட்டிங்?
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படத்தின் சூட்டிங், ஜூலை மாதத்தில் துவங்கும் என்று நெல்சன் சொல்லியிருந்தார். ஆனால் படத்திற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதால் படம் ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங்கை ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு கதையை உருவாக்க நெல்சனுக்கு 3 மாத அவகாசம் தேவைப்படுமாம்.

ரஜினிக்கு ஜோடி ஐஸ்வர்யா?
இந்நிலையில் தற்போது படத்தின் முன்னேற்பாடுகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ராயை ரஜினிக்கு ஜோடியாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
இவை அனைத்தையும் விரைவில் அதிகாரப்பூர்வமாக நெல்சன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களுடன் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இதற்கிடையில் தனது வழக்கமான செக்கப்பிற்காக ரஜினியும் அமெரிக்க பயணத்தை திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











