கவினை இன்னும் அம்மணமாத்தான் பார்க்கல.. பங்கம் பண்ண நெல்சன்.. அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் புரமோ தற்போது வழக்கம் போல நெல்சன் ஸ்டைலில் செம காமெடியாக வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கும் படங்களுக்கு எப்படி புரமோ இருக்குமோ அதே அளவுக்கு அவரது முதல் தயாரிப்பு படமான கவினின் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar) படத்திற்கும் இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக வசூல் வேட்டையாடியது. ஆனால், பிச்சைக்காரன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஸ்டார் கவினை அப்படியே பிச்சைக்காரன் கவினாக மாற்றி படத்துக்கு பிளடி பெக்கர் என கவுண்டமணி காமெடியில் சொல்லும் வசனத்தை டைட்டிலாக வைத்துள்ளனர்.

Nelson s first production movie with Kavin titled Bloody Beggar fun promo out now

இந்த டைட்டிலுக்கு எதிர்ப்புகள் கிளம்புமா? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்தாலும் கவினை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று தான் அவரது ரசிகைகள் நெல்சன் அண்ட் கோவை தற்போது திட்டி வருகின்றனர்.

பிளடி பெக்கர்: ஃபிலமண்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நெல்சன் தொடங்கி உள்ளார். நமக்கு பிடித்த மாதிரியான படங்களை செய்ய வேண்டும் என்றால் நாமே தயாரித்தால் தான் உண்டு என அவர் பேட்டி ஒன்றில் சொன்ன நிலையில், அவரை ரெடின் கிங்ஸ்லி தயாரிப்பாளராக கோர்த்து விட்டது போல இந்த புரமோ வெளியாகி இருக்கிறது. நெல்சனின் உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'பிளடி பெக்கர்' என டைட்டில் வைத்துள்ளனர்.

Nelson s first production movie with Kavin titled Bloody Beggar fun promo out now

செம ஃபன் புரமோ: அனிருத் மட்டும் மிஸ் ஆகிட்டார் என்கிற ஃபீலிங் இருந்தாலும் நெல்சன் வழக்கம் போல தனது ஸ்டைல் புரமோவை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, சிவபாலன் மற்றும் கவின் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் இன்ட்ரோ வீடியோ செம ஃபன்னாக உள்ளது.

அம்மணமாதான் பார்க்கல: கவினின் புதிய கெட்டப் இந்த படத்தில் பார்க்கப் போறீங்க என நெல்சனுக்கு பில்டப் கொடுக்க கவினை பொம்பள கெட்டப்பிலேயே பார்த்துட்டேன். இன்னும் நான் அம்மணமாதான் பார்க்கல என நெல்சன் சொல்லி விட்டு ரெடின் கிங்ஸ்லி சர்ப்ரைஸ் என கண்களை எல்லாம் பொத்திக் கொண்டு அவரை அழைத்து வர பிச்சைக்கார கெட்டப்பில் கவின் இருப்பதை பார்க்கவே பரிதாபமாக இருக்கு. நடிப்புக்காக கெட்டப் போட ஆரம்பித்து விட்ட கவினுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெல்சன் படம் போல காமெடி படமாக வந்தால் ரகளையாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X