அந்தரத்தில் பறந்து நடனமாடும் எஸ் ஜே சூர்யா.. வெளியானது என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா வீடியோ சாங்!

சென்னை : இயக்குவது என்றாலும் சரி நடிப்பது என்றாலும் சரி நடிகர் எஸ் ஜே சூர்யா அதில் தனது தனித்துவமான திறமையை தொடர்ந்து வெளிக் காட்டி வருகிறார்.

அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

மீண்டும் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா lபாடல் ஏற்கனவே டிரெண்ட்டான நிலையில் இப்பொழுது அதன் வீடியோ சாங் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

சிறந்த நடிகரா

சிறந்த நடிகரா

மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் நடிகர் எஸ் ஜே சூர்யா தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பை வேறு வேறு கோணத்தில் காட்டி பாராட்டுகளை பெற்று வர இறைவி,மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இப்படி ஒரு சிறந்த நடிகரா என ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

ஹாரர் கலந்த சைக்கோ

ஹாரர் கலந்த சைக்கோ

இதுபோக செல்வராகவன் திரைப்படங்கள் என்றாலே அதற்காக தனி ரசிகர் கூட்டமே இருக்கின்ற நிலையில் என் ஜி கே படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹாரர் கலந்த சைக்கோ திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திலிருந்து ஏற்கனவே சில காட்சிகள் வெளியாகின.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசை கட்டாயமாக இருக்கும். அந்த வகையில் இப்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருக்கிறார். குறிப்பாக இதில் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

வீடியோ சாங்

வீடியோ சாங்

காமெடி நடிகர் ஜனகராஜ் ஒரு படத்தில் கூறும் இந்த வசனம் இப்பொழுது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பாடலாக உருவாகியிருக்க இதன் வீடியோ சாங் இப்போது வெளியாகியுள்ளது. வெவ்வேறு விதமான தொழிற்சாலை கிடங்கில் எஸ். ஜே சூர்யா மட்டும் தனியாக பறந்து பறந்து காற்றில் நடனமாடியவாறு கோட்டு சூட்டுடன் கையில் சூட்கேசை வைத்துக்கொண்டு தன்னுடைய பாணியில் அனைவரும் ரசிக்கும் வகையில் நடனமாடி இருக்கும் இந்த வீடியோ சாங் இப்பொழுது வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X