twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை.. படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசாண்டரா, நந்திதா நடிப்பில் உருவாகி உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று பல தடைகளை தாண்டி வெளியாகி உள்ளது.

    பேய் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரும் பலமாக அமைந்துள்ளது.

    இந்த படம் நல்லா இருக்கா, இல்லையா? செல்வராகவன் கம்பேக் ஆனாரா? தியேட்டர் போய் பார்க்கலாமா வேண்டாமா? என படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் வாங்க..

    Nenjam Marapathillai Review: பேய் படம் பை செல்வராகவன்..நெஞ்சம் மறப்பதில்லை திரைவிமர்சனம்!Nenjam Marapathillai Review: பேய் படம் பை செல்வராகவன்..நெஞ்சம் மறப்பதில்லை திரைவிமர்சனம்!

    செல்வராகவன் படம்

    செல்வராகவன் படம்

    காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களை இயக்கிய செல்வராகவன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜீனியஸ் செல்வராகவன் தனக்கே உரிய ஸ்டைலில் ஒரு புதுவிதமான பேய் படத்தை உருவாக்கி உள்ளார்.

    எஸ்ஜே சூர்யா மிரட்டல்

    எஸ்ஜே சூர்யா மிரட்டல்

    இயக்கத்தில் செல்வராகவன் ஒரு சைக்கோன்னா, நடிப்பில் எஸ்.ஜே. சூர்யா இன்னொரு சைக்கோ, இவங்க ரெண்டு பேருமே இணைந்து மிரட்டி உள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், இன்னைக்கு படம் ஒரு வழியாக தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. நேற்று வெளியான என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ படம் எந்த அளவுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதை ரசிகர்கள் கணித்திருப்பார்கள்.

    என்ன கதை

    என்ன கதை

    அப்பாவியான பெண்ணான ரெஜினா கசாண்ட்ரா பெரிய பணக்கார வீட்டுக்கு வேலைக்கு போகிறார். அங்கே ராம்சேவாக எஸ்ஜே சூர்யாவும், அவரது மனைவியாக நந்திதாவும் உள்ளனர். ரெஜினாவை பார்த்ததும் சபலப் படும் ராம்சே, அவரை அடைய துடித்து கடைசியில் ரெஜினா இறந்து போகிறார். மீண்டும் பேயாக வந்து இவர்களை எப்படி பழி வாங்குகிறாள் என்பதை தனது முத்திரையுடன் வெரைட்டி காட்டி மிரட்டி இருக்கிறார் செல்வராகவன்.

    சிரிச்சே செத்துடுவீங்க

    தமிழ் சினிமாவில் பார்த்து பழகிப் போன இன்னொரு பழிவாங்கும் பேய் கதை தான். கதையில் மிகப்பெரிய ட்விஸ்ட்கள் எல்லாம் இல்லை வெறும் நார்மல் ஸ்டோரி தான். ஆனால், ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக நாயகன் எஸ்ஜே சூர்யா பேசும் வசனங்களும், பண்ணும் காமெடிகளையும் பார்த்தால் சிரிச்சே செத்துடுவீங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    செல்வா பின்னிட்டாரு

    என்ன ஒரு படம்.. செல்வராகவனை போல ஒரு அற்புதமான இயக்குநரை நான் இதுவரை கண்டதில்லை என கண்ணீர் எமோஜிலாம் போட்டு இந்த ரசிகர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் பர்த்டே பேபி செல்வாவை வாழ்த்தி வருகின்றனர். இந்த தேதியில் ரிலீஸ் ஆகத் தான் இத்தனை நாள் தள்ளிப் போனதோ!

    கண்ணுங்களா கண்ணுங்களா

    செல்வராகவன் படங்கள் என்றாலே ஏகப்பட்ட குறீயிடுகள், கவிதை மாதிரி கொஞ்சம் புரியாத கதை என நிறைய விஷயங்கள் இருக்கும். இந்த படத்திலும் அது நிறையவே கொட்டிக் கிடக்கிறது. கண்ணுங்களா.. கண்ணுங்களா பாடல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கு எனக் கூறியுள்ளார்.

    அப்புறம் வருத்தப்படாதீங்க

    நல்ல வேளை படம் 4 வருஷம் லேட்டாகிடுச்சு என சிலர் ட்வீட் போட்டு, இப்போ ரசிகர்களுக்கு நல்லாவே புரியும். முன்னாடியே ரிலீஸ் ஆகியிருந்தா, இப்போதான் பலரும் கொண்டாடுவார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. செல்வாவின் இயக்கம், எஸ்ஜே சூர்யா, ரெஜினாவின் டாப் நாட்ச் நடிப்பை மிஸ் பண்ணாமல் தியேட்டருக்கு போய் தாராளமாக பார்க்கலாம் என்பதே இவருடைய கருத்து.

    English summary
    Selvaraghavan and SJ Suryah’s magical treatment Nenjam Marappathillai finally released in theatres today. And also get positive and mixed reviews from Tamil audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X