நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா சிவாவுக்கு லாபமா, இல்லையா?: ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ ராஜ், ஷிரின், ராதாரவி, விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் இன்று வெளியாகியுள்ளது.
கனா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அருமை
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் முதல் பாதி அருமை என்கிறார் சஞ்சய் மதன்.
முதல் பாதி
ஷிரின் அறிமுகம் அருமை, முதல் பாதி செம, படத்திற்கு சபீர் அகமதின் இசை பலம். இடைவேளைக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளார் ரியோ ராஜ் ரசிகன்.
என்ன படம்?
யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில இருக்கிறவனெல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுப்பாங்களாம், அப்புறம் அவங்களே அது நல்ல படம், வேற லெவல் படம் எண்டெல்லாம் புழுகித்தள்ளுவாங்களாம்🤦♂️
இது என்ன மாதிரி டிஸைன் எண்டே புரியல😷
சிவகார்த்திகேயன்
சாரி சிவகார்த்திகேயன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மாஸ், கிளாஸ், மரண மாஸ் என்று தெரிவிப்பவர்கள் அனைவரும் உங்களின் தீவிர ரசிகர்களாகத் தான் உள்ளனர். மற்றவர்கள் அந்த படம் ஓடும் தியேட்டர்கள் காற்று வாங்குவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பல பேர் இரண்டாவது பாதி பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் படம் ஹிட்டாகிவிட்டது என்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். படத்தை விமர்சிப்பவர்களை விட சிவகார்த்திகேயன் தியேட்டருக்கு வந்தபோது எடுத்த புகைப்படத்தை வர்ணிப்பவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











