நெஞ்சில் துணிவிருந்தால் படம் இனி ஓடாது! - இயக்குநர் சுசீந்திரன் திடீர் அறிவிப்பு
Recommended Video

நான்கைந்து முறை பிரஸ் மீட், ட்ரைலர் வெளியீடு, ஆடியோ வெளியீடு, இரு முறை பிரஸ் ஷோ என நெஞ்சில் துணிவிருந்தால் படத்துக்கு தரப்பட்ட ப்ரமோஷன்கள் மாதிரி வேறு எந்தப் படத்துக்கும் தந்ததில்லை.
ஆனால் இப்போது படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளர் மட்டும் இயக்குநர்.

சுசீந்திரன் இயக்கிய இந்தப் படம் கடந்த 9-ஆம் தேதி வெளியானது. விமர்சனங்கள் திருப்தியாக இல்லை. இரு தினங்கள் கழித்து, படத்தின் நாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு நீக்கியிருந்தது. இதில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார். ஆனால் அப்படியும் ரிசல்ட் திருப்திகரமாக வரவில்லை.
இந்த சூழலில்தான் இயக்குநர் சுசீந்திரன் இன்று ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், நெஞ்சில் துணிவிருந்தால் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது, என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆன்டனி தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











