Don't Miss!
- News
பிளந்த முதுகு.. அண்ணி அனுப்பின போட்டோ.. டான்ஸ் மாஸ்டர் ரமேஷை தேடி வந்த 4 பேர்.. கொலை? தற்கொலை? மர்மம்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சோதனையான நேரம்?இன்னும் எத்தனை பேரை தாக்குமோ?..சமந்தா போல அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!
சென்னை : நடிகை சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல பிரபல நடிகை ஒருவரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மயோசிடிஸ் நோய் என்றால், என்னவென்று தெரியாத நிலையில், சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிறகு இந்த நோய் குறித்து பலரும் இணையத்தில் தேடி தேடி படிக்கத் தொடங்கினார்கள்.
மயோசிடிஸ் என்பது ஒரு தசை அழற்சி நோயாகும். இந்த நோய் எலும்புகளை இணைக்கக்கூடிய தசைகளை தாக்கும். இது கைகள் மற்றும் தோள்கள், கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கிறது.
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா.. எந்த நாட்டுக்கு தெரியுமா?

நடிகை சமந்தா
இந்த நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா யசோதா பட ப்ரோமோஷனில், ஆளே அடையாளம் தெரியாமல், ஒட்டிய முகத்துடன் பேட்டி கொடுத்து இருந்தார். அந்த போட்டியில் அரியவகை நோயால் மிகவும் கடினமான நாட்களை நான் அனுபவித்து வந்தேன் என்றும், ஆனால், உயிருடன் இருக்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

பதறிப்போன ரசிகர்கள்
சமந்தாவின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலர் பதறிப்போனார்கள், இந்த நோய்க்கு கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சமந்தா. தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.

நடிகை பூனம் கவுர்
இந்நிலையில், நடிகை சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது போலவே பிரபல நடிகை பூனம் கவுர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நரேன் நடித்த நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சுக்கு தெரிந்த முகம் ஆனார். காதலர்களுக்கு பிடித்த இத்திரைப்படம் திரையரங்கில் ஓரளவுக்கு ஓடியது.

பல படங்களில்
அந்த திரைப்படத்தை தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், 6, வெடி, என் வழி தனி வழி, அச்சாரம், நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சினிமாவை விட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் கடந்த சில நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அரியவகை நோய்
தற்போது பூனம் கவுரும் ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பாதித்த நபருக்கு எலும்பின் ஜாயின் பகுதியில் வலி ஏற்படும். மேலும், மூளை மற்றும் முதுகுத் தண்டு பகுதியில் அதிக வலி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பூனம் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆறுதல்
நடிகை பூனம் கவுர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நோயுடன் போராடி வருவதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா போல பூனமும் கேரள ஆயுர்வேத சிகிச்கை எடுக்க முடிவு செய்து இருப்பதாகவும், இந்த சிகிச்சையானது நோயாளிக்கு சற்று வலியை ஏற்படுத்தாமல் மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் அந்த நோயுடன் அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. பூனம் கவுரின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.