உதயநிதி ஸ்டாலின் “நெஞ்சுக்கு நிதி“… கொல மாஸ் அப்டேட்... குஷியில் ரசிகர்கள் !
சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படம் குறித்த சூப்பரான தகவல் நாளை மாலை வெளியாக உள்ளது.
இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் படக்குழு கவனம் செய்து வருகிறது.படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

ஆர்டிக்கள் 15
அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ஆர்டிக்கள் 15 தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

நெஞ்சுக்கு நீதி
பாலிவுட்டில் வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் உருவாகி உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மார்ச் மாதம் ரிலீஸ்
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை குடியரசு தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் வேலைகள் முடிய தாமதமானதால் மார்ச் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சூப்பர் அப்டேட்
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











