“ச்சீ.. அழுக்குக்கும்.. தீட்டுக்கும் வித்தியாசம் இல்ல“.. உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி டிரைலர் ரிவ்யூ!
சென்னை : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Recommended Video
திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்குனு பார்க்கலாமா?

நெஞ்சுக்கு நீதி
பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆர்ட்டிக்கள் 15. இந்தத் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், பிக்பாஸ் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அழுக்குக்கும், தீட்டுக்கும் வித்தியாசம் இல்ல
தற்போது வெளியாகி உள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலரின் ஆரம்பத்தில் அம்பேத்கரின் சிலை காட்டப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் ஜீப்பை ஓட்டிக்கொண்டுவரும் மயில்சாமி, எல்லாரும் சமம்னா யார்தான் ராஜா? என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்குகிறது. அவங்க குடிக்கும்போது அழுக்காகாத தண்ணீர் நாங்க குடிச்சா மட்டும் அழுக்காகி விடுமா? என்பதும் ச்சீ... அழுக்குக்கும்... தீட்டுக்கும் வித்தியாசம் இல்ல, என்ற வசனமும், அவங்க அவங்க இடத்துல அவங்க அவங்கள வைக்கனும், அப்பதான் சமுதாயத்தில் ஒரு பேலன்ஸ் இருக்கும் என்ற சாதி ரீதியான வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

நேர்மையான அதிகாரி
இரண்டு தலித் பெண்கள் கூட்டுபலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்குவது போல ஒரு காட்சியில் காட்டப்பட்டுள்ளது. சாதி ரீதியான வசனங்கள், அரசியல் குறியீடுகள் என நெஞ்சுக்கு நீதி டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் குற்றத்தை எதிர்த்துபோராடும் நேர்மையான காவல் துறை அதிகரியாக நடித்துள்ளார். இந்தபடம் நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.

மே 20ந் தேதி ரிலீஸ்
பாலிவுட்டில் ஹிட்டான ஆர்டிக்கள் 15 படத்தின் கதைக்களத்தை தமிழ்நாட்டுக்கு ஏற்றார்போல சில மாற்றங்களை செய்து அருண் ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதியை உருவாக்கியிருக்கிறார் என தெரிகிறது. இத்திரைப்படம் மே 20-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











