twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    50 நாட்களை கடந்த நெஞ்சுக்கு நீதி.. உதயநிதிக்காக காத்திருந்த போனி கபூர்.. ஹாப்பியாக நடந்த சக்ஸஸ் மீட்!

    |

    சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனன் போன்ற பலரும் நடித்திருந்த படம் தான் நெஞ்சுக்கு நீதி.

    நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியவர் அருண் ராஜா காமராஜ். இந்த படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது.

    பிக் பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்ரவர்த்தி கதாபாத்திரங்களும் படத்திற்கு பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா ஃபேன்ஸ் ரெடியா... சூர்யா 41 அப்டேட் வருது... இன்னைக்கு தரமான சம்பவம் காத்திருக்கு சூர்யா ஃபேன்ஸ் ரெடியா... சூர்யா 41 அப்டேட் வருது... இன்னைக்கு தரமான சம்பவம் காத்திருக்கு

    நெஞ்சுக்கு நீதி

    நெஞ்சுக்கு நீதி

    அருண் ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நிதி திரைப்படம் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனன் போன்ற பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கனா படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய படம் என்பதால் மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    ஆர்டிகிள் 15

    ஆர்டிகிள் 15

    ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் தான் இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்படுகின்றனர். உயர்ந்த ஜாதியாக நினைத்துக் கொண்டு தலித் மக்களை ஆட்டுவிக்கும் கூட்டம் எப்படி இவர்கள் உரிமைகளை பெற நினைக்கலாம் என ஒடுக்க நினைக்கும் சாதிய ஆவணத்தை ஆரம்பத்திலேயே படம் எடுத்துரைக்கின்றது.

    விஜயராகவனாக உதயநிதி

    விஜயராகவனாக உதயநிதி

    ஒரு குழந்தை மட்டும் காணாமல் போக, அதை கண்டுபிடிக்கும் பொறுப்பில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மூன்றாவது சிறுமி என்ன ஆனார். இந்த ஜாதி பிரச்சனை என்ன நடக்கின்றது? என்பதை கூறும் படமாக அமைந்திருந்தது நெஞ்சுக்கு நீதி படம். விஜயராகவன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக காவல் நிலையத்திற்குள் நுழைந்தவுடன் இவர் என்ன ஜாதி என்பதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் மத்த போலீஸ் அதிகாரிகள்.

    பிக் பாஸ் பிரபலங்கள்

    பிக் பாஸ் பிரபலங்கள்

    இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆரி அர்ஜுனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி. பல மர்ம கொலைகளை போலீசார் எப்படி தற்கொலையாக மாற்றுகின்றனர் என ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் காட்டுகின்றனர்.

    Recommended Video

    சில வார்த்தைகள்னு சொன்னத தப்பா நெனச்சுடீங்க போல | Nenjukku Thanks Meet #Kollywood
    வெற்றி கொண்டாட்டம்

    வெற்றி கொண்டாட்டம்

    படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சக்ஸஸ் மீட் வைக்கப்பட்டது. இதில் உதயநிதி, போனி கபூர், ஆரி அர்ஜுனன் போன்ற பலரும் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலினுக்காக போனி கபூர் காத்துக்கொண்டு இருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டது.

    English summary
    Nenjuku Neethi Movie Crossed 50 Days and Udhayanidhi – Boney Kapoor in Success Meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X