twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கமர்ஷியல் படத்துல இப்படி ஒரு பிரச்னை இருக்கு...' - ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் பேச்சு

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சுசீந்திரன் இயக்கத்தில் 'மாநகரம்' சந்தீப், விக்ராந்த் ஆகியோர் நடிக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    'வெண்ணிலா கபடி குழு', 'மாவீரன் கிட்டு' ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் சுந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, மெஹ்ரீன், அப்புக்குட்டி ஆகியோர் நடிக்கும் படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'.

    ஆக்ஷ்ன் த்ரில்லர் கலந்த இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அன்னை பிலிம்ஸ் ஃபேக்டரி ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

    இரு மொழிகளில்

    இரு மொழிகளில்

    'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் பேசினார். 'இந்தப் படத்தின் 'எச்சச்ச கச்சச்ச....' பாட்டு செமையா வந்திருக்கு. ரஜினி சார் டயலாக்கோடு பாடல் தொடங்கும்' எனக் கூறியிருக்கிறார் சந்தீப்.

    தயாரிப்பாளர் ஆண்டனி

    தயாரிப்பாளர் ஆண்டனி

    கம்பீரமான ப்ரொடியூசர் மாதிரி ரொம்பப் பாவமான ப்ரொடியூசர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி. படத்தை மக்களுக்கு எப்படிக் கொண்டுபோறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கார். படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறதுனு நிஜமாவே எங்களுக்குத் தெரியலை.

    விக்ராந்த்

    விக்ராந்த்

    எனக்கு ரொம்ப சீனியர் நடிகரா இருந்தாலும், எந்த ஈகோவும் இல்லாம அவ்வளவு சப்போர்ட்டிவ்வா இந்தப் படத்தில் நடிச்சார். இந்தப் படம் அவருக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருக்கும்னு தெரியலை. ஆனா, அவர் இந்தப் படத்துக்கு செம சப்போர்ட் கொடுத்திருக்கார்.

    சூரி

    நார்மலா சூரி வேற படங்களில் பண்ற காமெடிகள் வேற மாதிரி இருக்கலாம். ஆனா, சுசீந்திரன் சார் படம்னு வந்துட்டா அதில் அவரோட தனிப்பட்ட ஸ்டைல் நிற்கும். அதுதான் சுசீந்திரன் சாருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அது ரொம்ப பிரமாதமா வந்திருக்கு.

    வில்லன்

    வில்லன்

    குமார் எனும் என்னோட கேரக்டர் உருவாகணும்னா அவ்வளவு ஸ்ட்ராங்கனா வில்லன் வேணும். லுக், நடிப்பு எல்லாத்துலேயும் மிரட்டியிருக்கார் ஹரீஷ். நான் இவ்வளவு நம்பிக்கையா ஏன் சொல்றேன்னா நான் மூணு நாளைக்கு முன்னாடிதான் படத்தைப் பார்த்தேன்.

    சுசீந்திரன்

    சுசீந்திரன்

    இதைப் பல இடங்கள்ல சொல்லியிருக்கேன். சுசீந்திரன் சார்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு நான் ரசிகன். ரொம்ப நல்ல படமாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை என் நடிப்புக்கு கொடுத்திருக்கார். எதிர்காலத்துல ரொம்ப கர்வமா இப்படியொரு படத்தைப் பண்ணியிருக்கேன்னு சொல்லுவேன். பொதுவா கமர்ஷியல் படம் பண்ண பயமா இருக்கும். வித்தியாசமான திரைக்கதை கொண்ட படத்தில் நடிச்ச பெயராவது மிஞ்சும். கமர்ஷியல் படம் சரியா போகலைனா அவ்ளோதான். ஆனா, இந்தப் படத்தைப் பார்த்ததும் அவ்ளோ தைரியம் வந்திருக்கு.

    தங்கச்சி

    தங்கச்சி

    'நான் மகான் அல்ல' படத்தில் முதன்முதலா குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் 'அனு'ங்கிற ஒரு அழகான கேரக்டர் கொடுத்து நடிக்க வெச்சுருக்கார். இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் ஒரு நல்ல ரோலில் நடிக்கிறேன்.' என இந்தப் படத்தில் சந்தீப்பின் தங்கையாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பேசினார்.

    English summary
    The trailer launch of 'Nenjil Thunivirundhal' directed bu suseenthiran will be held in Chennai. The film's hero Sundeep Kishan also participated in this function and said, "There is a problem in acting in a commercial film."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X