மருமகளை கட்டாயப்படுத்தல.. போன வருஷம் சஷ்டிக்கு விரதம் இருந்தேன்.. ஒரு வருடத்தில் திருமணம் - சுதா!
சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின்னர், டூர் சுற்றிப் பார்க்க சுமார் 200 பேருடன் மணமக்களை ஜப்பான் முழுவதும் அனுப்பி வைத்திருப்பதாக நெப்போலியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சஷ்டி விரதம் இருந்து தனது மகனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அதற்கு கைமேல் பலனாக அடுத்த ஆண்டு சஷ்டி விரதத்துக்குள் முருகக் கடவுள் எங்களுக்கு நல்ல மருமகளை கொடுத்துள்ளார் என நெப்போலியனின் மனைவி ஜெயசுதா வெளிப்படையாக பேசியுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்தால் தனுஷின் உடம்புக்கு ஆகாது என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அவன் ஆசைப்பட்ட நகரமான ஜப்பானுக்கு கப்பல் வழியாக வந்து திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்தி விட்டேன் என நெப்போலியனும் கண்கலங்கி பேசியுள்ளார்.
மருமகளை கட்டாயப்படுத்தல: இப்படியொரு பிரச்சனை இருக்கும் எங்கள் மகனை யார் திருமணம் செய்துக் கொள்வார் என்கிற கவலை ரொம்பவே மனதை போட்டு உலுக்கி வந்தது. ஆனால், இப்போ தான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் என திருமணத்திற்கு பிறகு கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நெப்போலியனும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். மேலும், மருமகளை தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றும் இந்த திருமணத்துக்கு அக்ஷயா சம்மதம் தெரிவித்த நிலையில், உனக்கு இதில் சம்மதமாம்மா யாரும் உன்னை கட்டாயப்படுத்தவில்லையே என்று கேட்டோம். அவர் தனக்கு இதில், பரிபூரண சம்மதம் என்று சொன்னதற்கு பிறகு தான் திருமண வேலைகளையே தொடங்கினோம் என நெப்போலியன் கூறியுள்ளார்.
சஷ்டி விரதத்தால் கிடைத்த மருமகள்: கடந்த ஆண்டு சஷ்டி விரதத்தை ரொம்பவே சிரத்தை எடுத்து எடுத்தேன். காலை முதல் எதுவுமே சாப்பிடாமல் முருகனை வழிபட்டு இரவு நேரத்தில் பழம் மட்டும் சாப்பிட்டு படுத்துக் கொள்வேன். சஷ்டி விரதம் எடுத்து ஒரு வருடத்தில் இந்த சஷ்டிக்கு என் மகனுக்கு திருமணமே ஆகிவிட்டது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை அளிக்கிறது என நெப்போலியனின் மனைவி ஜெயசுதா கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
200 பேருடன் டூர்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்துக்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் மாப்பிள்ளை மற்றும் பெண்ணுடன் சேர்த்து 200 பேரை 2 பஸ், 4 வேன்களை பிடித்து டூருக்கு அனுப்பியுள்ளேன் என நெப்போலியன் கூறியுள்ளார்.
அக்ஷயா தங்கமான பொண்ணு: இப்படியொரு பெண்ணை பார்ப்போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எங்களுடைய மகனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி முழுவதுமாக அறிந்துக் கொண்ட பின்னரும் அவனை திருமணம் செய்துக் கொள்ள முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளார். என்னுடைய மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பல ஆண்டுகளாக மனதில் இருந்த பாரமே இறங்கிடுச்சு. இனிமேல் என் மகனை மருமகள் பார்த்துக் கொள்வாள். அக்ஷயா தங்கமான பொண்ணு என மாமனார் நெப்போலியன் அகமகிழ்ந்து பேசியுள்ளார்.
மேல் சிகிச்சை: தனுஷ் உடல்நலம் பெற வேண்டி மேல் சிகிச்சை எடுக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா என சுஹாசினி கேள்வியெழுப்ப அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்றும் திருமணம் நடந்த சந்தோஷத்திலேயே தனுஷ் நல்லா குணமாகிடுவான்னு நினைக்கிறேன் என்றார் நெப்போலியன்.


Click it and Unblock the Notifications











