பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.. மகன் கல்யாணம்.. நெப்போலியன் உருக்கம்.. காரணம் இதுதான்
சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கியவர் நெப்போலியன். தனது எதார்த்தமான நடிப்பாலும், வாட்ட சாட்டமான அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அவர். அவருக்கு தனுஷு, குணால் என்ற மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் தனுஷுக்கு ஜப்பானில் நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் அக்ஷயா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அதில் கலா மாஸ்டர், மீனா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் தடம் பதித்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். மத்திய இணையமைச்சராக இருந்த அவர் தற்போது சினிமா மற்றும் அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு காரணம் அவரது மகன் தனுஷ். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் மூத்த மகன்.

தசை சிதைவு நோய்: தனுஷுக்கு சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோய் வந்துவிட்டது. முதலில் இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அது ஒத்துவரவில்லை. இதனையடுத்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலானார் நெப்போலியன். அந்நாட்டில் தனுஷுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் தனுஷுக்காகவே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் அங்கே தொடங்கி தனது மகனை ஓனராக்கி அழகு பார்த்தார் நெப்போலியன். தன் மகனுக்காக நெப்போலியன் செய்யும் ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தனுஷுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் நெப்போலியன். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் - ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது. அதில் தனுஷால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் வீடியோ காலில் பங்கேற்றார் தனுஷ். அவர்களது திருமணம் நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்காக இப்போது ஜப்பானில் குடும்பத்துடன் முகாமிட்டிருக்கிறார் நெப்போலியன்.
களைகட்டும் ஏற்பாடுகள்: நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடக்க தொடங்கியிருக்கின்றன. தனுஷின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நடன அமைப்பாளர் கலா மாஸ்டர், நடிகை மீனா ஆகியோர் முதல் ஆளாக ஜப்பானில் ஆஜராகியிருக்கிறார்கள். மேலும் பல திரை பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜப்பானுக்கு செல்வார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண நிகழ்வுகள் எனென்ன தெரியுமா?: தனுஷின் திருமணம் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. சங்கீத், ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. இவற்றில் சங்கீத் நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கும் பொறுப்பை கலா மாஸ்டர் ஏற்றிருக்கிறார். அந்த நிகழ்வில் ராதிகா, சரத்குமார், நெப்போலியன் உள்ளிட்டோர் நடனமாட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் குஷ்பூகூட பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு நடனமாட அதிக வாய்ப்புகள் உள்ளன.
நெகிழ்ந்த நெப்போலியன்: இந்நிலையில் கலா மாஸ்டரிடம் நெப்போலியன் பேசும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது இந்த திருமணத்தை பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அந்தவகையில் ஜப்பான் சென்றிருக்கும் கலா நெப்போலியன் குடும்பத்தை சந்திக்கும் வீடியோவையும் அந்த சேனல் வெளியிட்டிருக்கிறது. அதில் கலாவிடம் நெப்போலியன், “எனது மகன் திருமணத்தில் நீங்கள் வந்து இருந்து சங்கீத் நிகழ்வை நடத்தி கொடுப்பதெல்லாம் எனக்கு பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என்று நெகிழ்ந்தபடி கூறுகிறார். மேலும் கலா, 'எனக்கும் நெப்போலியனுக்கும் 33 வருட கால நட்பு. இது என் வீட்டு கல்யாணம் மாதிரி’ என்றும் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











