நெப்போலியன் மகன் கொண்டாடிய ‘தல’ பொங்கல்.. மனைவி மற்றும் குடும்பத்துடன் எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஜப்பானில் தனது மகன் திருமணத்தை கோலாகலமாக பல தடைகளையும் அவமானங்களையும் கடந்து நடத்தியிருந்தார் நடிகர் நெப்போலியன். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கும் குடும்பத்துடன் நெப்போலியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்‌ஷயா என்பவருக்கும் ஜப்பானில் திருமணம் நடைபெற்றது. நடிகர்கள் கார்த்தி, சரத்குமார், குஷ்பு, மீனா, ராதிகா உள்ளிட்ட பலர் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

nepolean nepolean son pongal 2025 2025

யூடியூபர் இர்பான் ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை சோஷியல் மீடியாவில் அதிகரித்தார்.

அவமானங்களுக்கு மத்தியில் திருமணம்: தசை சிதைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷுக்காக சென்னை வீட்டையே விற்றுவிட்டு அமெரிக்காவுக்கு சென்று குடியேறினார் நடிகர் நெப்போலியன். சினிமா, அரசியல் வாழ்க்கை எல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவில் பிசினஸ் செய்தும் தனது மகன் தனுஷுக்காக பல தியாகங்கள் செய்தும் வாழ்ந்து வரும் அவர் எப்படியாவது தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என நினைக்க, பலரும் தனுஷுக்கு ஏன் திருமணம் என்றும் தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏன் சீரழிக்கிறீங்க என பேசினர். ஆனால், தனுஷை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து அக்‌ஷயா என்பவர் வந்த நிலையில், ஜப்பானில் தனது மகன் திருமணத்தை நடத்தி முடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் நெப்போலியன்.

nepolean nepolean son pongal 2025 2025

புத்தாண்டு வாழ்த்து: திருமணம் முடிந்த நிலையில், ஏகப்பட்ட பேட்டிகளையும் நெப்போலியன் கொடுத்திருந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி தனது மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து வீட்டுக்கு வந்த மருமகளுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் சூப்பர் என பலரும் வாழ்த்தினர்.

தல பொங்கல் கொண்டாட்டம்: கடந்த ஆண்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டு தல பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக திருமணம் நடத்தி முடித்த நெப்போலியன் மகன் தனுஷும் தனது மனைவியுடன் தல பொங்கல் கொண்டாடியுள்ளார். குடும்பத்துடன் எடுத்த புதிய புகைப்படத்தை வெளியிட்டு நெப்போலியன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X