நெப்போலியன் மகன் திருமணம்.. ஜப்பானுக்கு படையெடுத்த பிரபல நடிகைகள்.. சங்கீத் களைகட்டப் போகுதாம்!
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷ் திருமணத்தை ஜப்பானில் வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டுள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணத்தை ஜப்பானில் இந்த வாரம் நடத்த உள்ளார். இந்தியாவில் இருந்து சில பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளை விமானம் மூலம் அழைத்தும் சென்றிருக்கிறார்.
கலா மாஸ்டர் 33 ஆண்டுகள் நெப்போலியன் உடன் நட்பு பாராட்டி வரும் நிலையில், திருமணத்துக்காக ஜப்பான் சென்றுள்ளார். மேலும், ஹல்தி, சங்கீத், மெஹந்தி என அனைத்து நிகழ்ச்சிகளையும் ஜப்பானில் அரங்கேற்றும் முழு பொறுப்பையும் கலா மாஸ்டர் தான் ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் திருமண மண்டபத்தில் ஒரு ஸ்டிக்கர் கூட ஒட்டக் கூடாது என்கிற நிலையில், செட் போடுவதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் இந்தியாவில் இருந்தே கொண்டு சென்றிருப்பதாக கூறியுள்ளார்.
மீனா முதல் குஷ்பு வரை: இப்போ இருக்கின்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் போல எல்லாம் நாங்கள் இல்லை. இன்னமும் அனைவரும் குடும்பமாகவே செயல்பட்டு வருகிறோம். ஒரு நிகழ்ச்சி என்றால் அனைத்து நடிகைகளும் நடிகர்களும் அழைத்தவுடனே வந்துவிடுவார்கள் என கலா மாஸ்டர் கூறியுள்ளார். விமானத்தில் தன்னுடன் நடிகை மீனா ஜப்பானுக்கு வந்தார் என்றும் அவருடன் ஏகப்பட்ட விஷயங்களை விமானத்தில் பேசி வந்ததாகவும் கூறிய கலா மாஸ்டர் சங்கீத் நிகழ்ச்சியில் நடிகைகள் மீனா, குஷ்பு, ரம்பா மற்றும் ராதிகா சரத்குமார் நடனமாடப் போவதாக கூறியுள்ளார்.
ஹல்தி முதல் சங்கீத் வரை: ஜப்பானில் சங்கீத் நிகழ்ச்சியை நடத்தலாம் என்றதும் நெப்போலியன் இதெல்லாம் இங்கே சாத்தியமா? என்று கேட்டார். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்கிறேன். ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் என அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்தலாம் என்றேன் என கலா மாஸ்டர் கூறியுள்ளார். கண்டிப்பாக "பஞ்சுமிட்டாய் சீலைக்கட்டி" பாடலுக்கு நிச்சயம் நடிகைகள் செம குத்தாட்டம் போட போவது உறுதி என்கின்றனர்.
மணப்பெண் ஹேப்பி: கலா மாஸ்டர் வந்தவுடனே நெப்போலியன் அவரை வரவேற்றார். மணப்பெண் அக்ஷயாவையும் கலா மாஸ்டர் அறிமுகப்படுத்தி வைத்தார். தனுஷ் உடன் திருமணம் ஆவப்போவதை நினைத்து ரொம்பவே மணப்பெண் சந்தோஷமாக உள்ளார் என்றும் கலா மாஸ்டர் காட்டினார். சரத்குமார் மற்றும் நெப்போலியன் இணைந்து நடனமாடப் போவதாகவும் தமிழ்நாட்டில் நடைபெற்று இருந்தால் ஒட்டுமொத்த திரையுலகினரும் வந்திருப்பார்கள். ஜப்பான் என்பதால் ஓரளவுக்கு பிரபலங்கள் வர முடிவு செய்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் நெப்போலியன் மகன் திருமணத்தின் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











