Nepolean Son Marriage: கப்பலில் ஜப்பானுக்கு போறோம்.. மகன் தனுஷ் திருமணம்.. நெப்போலியன் செம ஹேப்பி!
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார். வழியில் அவர் சந்திக்கும் சவால்களையும், செல்லும் இடங்கள் பற்றியும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
சிக்காகோவில் இருந்து சியாட்டல் எனும் இடத்துக்கு ரயில் பயணம் மூலம் கடந்தது குறித்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்த நெப்போலியன் அடுத்ததாக தற்போது காரில் பயணம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் அமெரிக்காவில் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனுஷ் திருமணம் தொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது செல்ல மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக ஜப்பானில் நடத்த நெப்போலியன் முடிவு செய்துள்ளார்.
நெப்போலியன் மகன் திருமணம்: பஞ்சுமிட்டாய் சீலை கட்டி பாடல் இப்போ மார்க் ஆண்டனி படத்தைத் தொடர்ந்து வாழை படம் மூலமாகவும் டிரெண்டாகி வருகிறது. அந்த காலத்தில் இந்த பாடலுக்கு குஷ்பு மற்றும் ஊர்வசி உடன் நடனம் ஆடியதே நம்ம நெப்போலியன் தான். கிராமத்து படங்களில் ஹீரோவாக கையில் அருவா ஏந்தி இவர் நடித்தாலே அனல் பறக்கும். அதன் பின்னர் வில்லனாகவும் குணசித்ர வேடங்களிலும் நடித்து வந்த நெப்போலியன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆன நிலையில், அரசியல், பிசினஸ் என ரூட்டை மாற்றினார். ஆனால், தனது மகனுக்காக எல்லாத்தையும் ஓரங்கட்டி வைத்து விட்டு தனது மகன் தனுஷ் திருமணத்துக்காக ஜப்பான் கிளம்பியுள்ளார்.

ரயில், கார், கப்பல்: தனுஷுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலேயே அவருடைய திருமணத்தை நடத்தலாமே என பலரும் கூறி வந்தாலும், ஜப்பானில் தான் திருமணம் செய்வேன் என்கிற முடிவை எடுத்துள்ள நெப்போலியன் விமான பயணத்தை தவிர்த்து விட்டு தனது குடும்பத்துடன் ரயில் மற்றும் கார் பயணத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வந்துள்ளார். அடுத்ததாக கனடாவின் வான்கூவரில் இருந்து கப்பல் மூலம் ஜப்பானுக்கு போகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சந்தோஷத்தில் தனுஷ்: அக்ஷயா என்கிற பெண்ணை தனுஷ் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். அந்த திருமணத்துக்காக தனது மனைவி மற்றும் இன்னொரு மகனையும் அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் டிராவல் செய்து வரும் நெப்போலியன் டிராவல் செய்யும் இடங்கள் குறித்தும் தங்கும் ஹோட்டல்கள் குறித்தும் உணவு விடுதிகள் குறித்தும் விளக்கமாக கூறி வருகிறார். மேலும், இந்த டிராவல் தனது மகன் தனுஷுக்கு ரொம்பவே மகிழ்ச்சியை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











