Nepoleon: கருவுக்கே விஷம் வைத்தவர்.. நெப்போலியனை திருமணம் செய்ய மறுத்த ஜெயசுதா!

டோக்கியோ: நடிகர் நெப்போலியன்-ஜெயசுதா தம்பதிக்கு திருமணமாகி 31 ஆண்டுகள் முடிந்துள்ளன. தனுஷ், குணால் என இரு மகன்கள் இவர்களுக்கு உள்ள நிலையில், தன்னுடைய மூத்த மகன் தனுஷிற்காக இவர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அங்கேயே சாப்ட்வேர் பிசினசை துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறார் நெப்போலியன்.

தற்போது மூத்த மகன் தனுஷிற்கும் நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் திருமணம் நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். தன்னுடைய மகனின் தசை சிதைவு நோய் பாதிப்பு காரணமாகவே அமெரிக்காவில் இவர்கள் செட்டில் ஆன நிலையில், தன்னுடைய மகனின் விருப்பத்திற்காக அவரது திருமணத்தை தற்போது ஜப்பானில் இவர்கள் நடத்தி முடித்துள்ளனர்.

nepoleon jayasudha dhanoosh

நெப்போலியன் & ஜெயசுதா ஜோடி: நடிகர் நெப்போலியன் மற்றும் ஜெயசுதா தம்பதிக்கு திருமணமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் உலகம் மெச்சும்வகையில் தற்போது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். தன்னுடன் நடித்த குஷ்பூ, ராதிகா, மீனா உள்ளிட்டவர்களுடன் சரத்குமார், பாண்டியராஜன், கார்த்தி உள்ளிட்டவர்களும் இந்த திருமணத்தில் இணைந்துக் கொள்ள நேரில் வர முடியாதவர்கள் பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்ததாக நெப்போலியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தேவதையாக கிடைத்த ஜெயசுதா: தற்போது மகனின் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில், தன்னுடைய மனைவியுடன் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் நெப்போலியன். அப்போது தன்னுடைய மகன் தனுஷின் திருமணம் மட்டுமில்லாமல் தன்னுடைய திருமண நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டார். சினிமாவில் நடித்ததால் தனக்கு யாருமே பெண் கொடுக்க முன்வரவில்லை என்றும் 50க்கும் மேற்பட்ட பெண்களை பார்த்த நிலையில் தனக்கு எந்த பெண்ணுமே செட் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்தே தனக்கு தேவதையாக ஜெயசுதா கிடைத்ததாகவும அவரை திருமணம் செய்ததாகவும் நெப்போலியன் கூறியுள்ளார். ஆனால் தனக்கு பார்த்த முதல் வரனே நெப்போலியன்தான் என்று ஜெயசுதா தெரிவித்துள்ளார்.

கருவிற்கே விஷம் வைத்தவர்: தன்னுடைய குடும்பத்தினர் ஜெயசுதாவை திடீரென பெண் பார்க்க சென்ற நிலையில், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக நெப்போலியன் கூறியுள்ளார். நெப்போலியனா அவர் மிகவும் கொடூரமான வில்லன், எஜமான் படத்தில் மீனாவின் கருவிற்கே விஷம் வைத்தவர், அவரை தான் திருமணம் செய்ய மாட்டேன் என ஜெயசுதா உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து ஜெயசுதாவின் அப்பா அவரை சமாதானப்படுத்தி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாக நெப்போலியன் மேலும் கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சி, திருச்சியில் கலைஞர் முன்னிலையில் திருமணம், மீண்டும் சென்னையில் சினிமா துறையினருக்காக ரிஷப்ஷன் என அந்த காலகட்டத்திலேயே நெப்போலியன் திருமணம் களைகட்டியுள்ளது.

நெப்போலியன் மலரும் நினைவுகள்: இந்த வரவேற்பில் ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் மிகவும் உற்சாகமாக இருந்ததாக ஜெயசுதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 1993ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக ஜெயசுதாவிற்காக கவிதையெல்லாம் எழுதி இருந்துள்ளார் நெப்போலியன். திருமணத்திற்கு முன்பு தான் ஜெயசுதாவை ஒரே முறைதான் சந்தித்ததாகவும் அவர் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய மகனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நெப்போலியன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X