Akshaya: திருமண விழாவில் செம குத்தாட்டம் போட்ட நெப்போலியன் மருமகள்.. தனுஷ் என்ன பண்ணாரு தெரியுமா?

டோக்கியோ: நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயா இருவருக்கும் நேற்றைய தினம் ஜப்பானின் தோக்கியோவில் மிகச் சிறப்பான வகையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் இருந்து நடிகர்கள் கார்த்தி, மீனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், பாண்டியராஜன் மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர்கள் தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர். இந்நிலையில் சங்கீத் நிகழ்ச்சியில் தனுசுடன் இணைந்து அக்ஷயாவும் நடனம் ஆடியதை பார்க்க முடிந்தது. அவரது நடனத்தை அமர்ந்தபடி மிகவும் பெருமிதத்துடன் பார்த்த தனுஷ் அவருடன் இணைந்து பாடலையும் பாடினார்.

nepoleon dhanoosh akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர். அரசியல்வாதி என இரட்டை சவாரி செய்து வந்த நடிகர் நெப்போலியன் ஒரு கட்டத்தில் இவை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு. தன்னுடைய வாழ்க்கையை புதிதாக துவங்குவது போல அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்தினருடன் செட்டிலானார். இதற்கு முக்கியமான காரணம் அவரது மூத்த மகனின் தசை சிதைவு நோய். இந்தியாவில் அதற்கான சரியான சிகிச்சை கிடைக்காத நிலையில் அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன், தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டார். தன்னுடைய மகனை அதிகமாக கவனித்துக் கொண்டது தன்னுடைய மனைவி தான் என்று தற்போது தன்னுடைய பேட்டியொன்றில் பேசியுள்ளார் நெப்போலியன்.

விமரிசையாக நடந்த திருமணம்: ஜெயசுதா வீட்டையும் மகனையும் பார்த்துக் கொள்ள தன்னுடைய மகன் தனுஷ் பெயரிலேயே அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை துவங்கி அதை மிகச் சிறப்பான வகையில் சக்சஸாக மாற்றிக் காட்டினார் நெப்போலியன். இவரது சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தன்னுடைய மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயாவின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். இந்த திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க அவருடன் நடித்த குஷ்பூ, ராதிகா, மீனா மட்டுமில்லாமல் சரத்குமார், பாண்டியராஜன், கார்த்தி ஆகியோரும் ஜப்பான் சென்றிருந்தனர்.

நெப்போலியன் ஆனந்த கண்ணீர்: இவர்கள் அனைவரும் கலந்து கொள்ள தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் கோலாகலமாக நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. முன்னதாகவே இந்த திருமண கொண்டாட்டத்தை நெப்போலியன் உள்ளிட்ட குடும்பத்தினர் சங்கீத், மெஹந்தி, ஹல்தி என மிகச் சிறப்பாக திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தன்னுடைய மகன் திருமணம் நடந்து முடிந்தவுடன் தன்னுடைய கண்களின் நீர் பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தார் நெப்போலியன். இதையடுத்து மிகவும் வலிமையுடன் திருமண ஏற்பாடுகளை கவனித்துவந்த அவரது மனைவி ஜெயசுதாவும் தன்னுடைய கண்ணீரை அடக்க முடியாமல் வெளிப்படுத்தினார்.

குத்தாட்டம் போட்ட அக்ஷயா: இந்த திருமணத்தின் விருந்தோம்பலில் மிகச் சிறப்பாக தன்னுடைய வலிமையை காட்டியிருந்தார் நெப்போலியன். இதேபோல சின்ன சின்ன கொண்டாட்டத்தையும் விட்டுவிடாமல் அனைத்தையும் மிகச் சிறப்பாகவே இந்த திருமணத்தில் அரங்கேற்றினார். திருமணத்தையொட்டி நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் தனுஷுடன் இணைந்து நெப்போலியன் மருமகள் அக்ஷயாவும் நடனம் ஆடியதை பார்க்க முடிந்தது. அவர் சின்ன சின்ன ஸ்டெப்ஸ்கள் மூலம் அரங்கத்தை அதிர வைத்த நிலையில் அவருடன் இணைந்து அவர் ஆடிய பாடலை பாடி தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்தார் தனுஷ்.

நெப்போலியன் நெகிழ்ச்சி: இவர்களது இந்த ஜோடி மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் நீண்ட காலங்கள் வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்தியதையும் பார்க்க முடிந்தது. தன்னுடைய மகன் தனுஷின் திருமணம் மிக சிறப்பாக தான் எண்ணியபடி நடந்ததையடுத்து நடிகர் நெப்போலியன் தன்னுடைய மருமகளையும் மேடையிலேயே பாராட்டினார். தன்னுடைய மருமகள் தங்கள் வீட்டிற்கு விளக்கேற்ற வந்தவள் மட்டும் இல்லை அவள் தங்களது குலசாமி என்று நெப்போலியன் நெகிழ்ச்சியுடன் பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X