நெப்போலியன் இப்போ எங்க இருக்காரு பாருங்க.. மலேசியா முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்.. அடுத்த டூர்!
தாய்லாந்து: ஜப்பானில் தனது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க அமெரிக்காவில் இருந்து கிளம்பிய நெப்போலியன் இன்னும் அமெரிக்காவுக்கு ரிட்டர்ன் ஆகவில்லை. ஜப்பானில் இருந்து சிங்கப்பூர், மலேசியா என கடந்த 100 நாட்களுக்கும் மேல் டூர் அடித்துக் கொண்டிருக்கிறார். மலேசியாவுக்கு வந்த நெப்போலியன் குடும்பம் அடுத்ததாக தாய்லாந்து சென்றுள்ளனர்.
வாழ்ந்தால் நெப்போலியன் மாதிரி வாழ வேண்டும் என்றும் அட்லீஸ்ட் நெப்போலியன் குடும்பத்துடன் சேர்ந்து டூராவது அடிக்க வேண்டும் என ரசிகர்களே கமெண்ட் அடிக்கும் அளவுக்கு நடிகர் நெப்போலியன் இப்போ Vlog செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார்.

அமெரிக்காவில் இருந்து ரயில் மூலமாக சிக்காகோவுக்கு வந்து கனடாவில் இருந்து கப்பல் மூலமாக ஜப்பானுக்கு சென்றதை எல்லாம் வீடியோவாக வெளியிட்ட நெப்போலியன் தனது மகன் திருமணத்தையும் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்திருந்தார்.
மலேசியா முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்: புதுமண தம்பதிகளான தனது மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா என்றைக்கும் சந்தோஷமாக வாழ்வதற்காக மலேசியாவில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன் என வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ஷனும் போட்டிருக்கிறார் நெப்போலியன். நெப்போலியன், தனுஷ், அக்ஷயா, நெப்போலியன் மனைவி உள்ளிட்டோர் முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
மாலையும் மரியாதையும்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் இருந்த நெப்போலியன் மிகப்பெரிய கோடீஸ்வரராக வலம் வருகிறார். அவருக்கு எங்கே சென்றாலும் மாலையும் மரியாதையும் கிடைத்து வருகிறது. மலேசியா முனீஸ்வரன் கோயிலுக்கு சென்ற நெப்போலியன் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய மாலையை அணிவித்து கோயில் நிர்வாகிகள் வரவேற்ற காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

தாய்லாந்தில் நெப்போலியன் குடும்பம்: சிங்கப்பூரில் ஹிப் ஹாப் ஆதியை சந்தித்த வீடியோவை நெப்போலியன் ஷேர் செய்திருந்தார். அங்கிருந்து மலேசியாவுக்கு சென்ற நெப்போலியன் அங்கே சில நகரங்களுக்கு குடும்பத்துடன் சென்று டூர் அடித்து முடித்த நிலையில், தற்போது அங்கிருந்து தாய்லாந்துக்கு சாலை மார்க்கமாக வந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். தாய்லாந்தில் உள்ள புத்தர் கோயில்களுக்கும் அங்கே இருக்கும் பிரபலமான சுற்றுலா இடங்களுக்கும் சென்றுவிட்டு அங்கிருந்து அடுத்த இடத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு எப்போது?: மருமகளின் வீட்டுக்கே டூர் அடித்துக் கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களையும் நெப்போலியன் குடும்பம் வைத்திருப்பதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டுக்கு விரைவில் வரவுள்ளதாகவும் இங்கே பல நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் மெகா விருந்து வைக்கவும் நெப்போலியன் திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











