Nepoleon: படுக்கையிலிருந்து எழுந்த நெப்போலியன் மகன்.. மனைவியுடன் 2வது பொங்கலையும் தூள் கிளப்பிட்டாரே!
சென்னை: நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மூத்த மகன் தனுஷுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என தீவிரமாக பெண் பார்த்து வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாகலமாக ஜப்பானுக்கே சென்று திருமணத்தை தனது மகனின் ஆசைக்கேற்ப நடத்தி வைத்தார்.
கடந்த ஆண்டு தல பொங்கலை தனுஷ் தனது மனைவி அக்ஷயாவுடன் கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு பொங்கலையும் கொண்டாடிய வீடியோவை சற்றுமுன் நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்ததாக நெப்போலியனின் 2வது மகனுக்கும் சீக்கிரமே இந்த ஆண்டு திருமணத்தை நடத்தி வைப்பாரா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

படுக்கையில் இருந்த தனுஷ்: தசைநார் சிதைவு நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் நெப்போலியனின் மகன் தனுஷ் கடந்த சில மாதங்களாக படுக்கையில் ஓய்வெடுத்து வந்தார். தமிழ்நாட்டில் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினரை காண மாதம்பட்டி ரங்கராஜ், விதார்த், ஆதித்யா ராம் உள்ளிட்ட பிரபலங்கள் சென்றபோது படுக்கையில் இருந்த தனுஷை பார்த்து வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஆக்டிவாக சக்கர நாற்காலியில் சுற்ற ஆரம்பித்துள்ளார்.
பொங்கல் கொண்டாடிய நெப்போலியன்: நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு தல பொங்கலை முன்னிட்டு தடபுடலாக கொண்டாட்டத்தை நடத்திய நெப்போலியன், இந்த ஆண்டும் தனது மகன், மருமகள், மனைவி, இளைய மகன் மற்றும் மருமகள் வீட்டார் என அனைவரையும் வைத்துக் கொண்டு பொங்கல் கொண்டாடிய காட்சிகளை வெளியிட்டுள்ளார். உலகில் இப்படியொரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் நெப்போலியனை பாராட்டி வருகின்றனர்.
மகனும் மருமகளும் ஹேப்பி: கடந்த ஆண்டு தல பொங்கலை கொண்டாடிய தனுஷ் இந்த ஆண்டு தனது மனைவியுடன் 2வது பொங்கலையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ச்சியடைந்தார். கூடிய சீக்கிரமே நெப்போலியன் வீட்டில் அடுத்த விசேஷமும் நடைபெற வேண்டும் என இளைய மகனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











