Nepoleon: மனசோ இப்ப தந்தியடிக்குது.. தனுஷ் & அக்ஷயா திருமண நிகழ்வில் களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்!

சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் நாளைய தினம் ஜப்பானின் நடக்கவுள்ள நிலையில் அதையொட்டிய கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நடிகைகள் மீனா, ராதிகா, சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் ஜப்பானில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் நடிகர் நெப்போலியன் பார்த்து பார்த்து செய்து வருகிறார். தன்னுடைய மகனுக்காக தன்னுடைய சினிமா, அரசியல் உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன், தற்போது அவரின் திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.

nepoleon dhanoosh akshaya

நெப்போலியன் மகன் திருமணம்: நடிகர் நெப்போலியன் சினிமாவில் ஹீரோ, வில்லன் என கலந்துக்கட்டி நடித்தவர். அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திவந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் தசை சிதைவு நோய் காரணமாக அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டிலானார். இதையடுத்து அங்கு சாப்ட்வேர் பிசினசை துவங்கி அதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய அப்பா ஒரு விஷயத்தை நினைத்துவிட்டால் சாதிக்காமல் விடமாட்டார் என்று தனுஷே தற்போது கூறும்வகையில் நெப்போலியன் மிகவும் வலிமையான கேரக்டராக காணப்படுகிறார்.

nepoleon dhanoosh akshaya

தனுஷ் & அக்ஷயா ஹல்தி கொண்டாட்டம்: தற்போது தனுஷிக்கும் அக்ஷயா என்பவருக்கும் ஜப்பானில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் நெப்போலியன். இதையொட்டி தமிழ்நாட்டிலிருந்து மீனா, ராதிகா, பாண்டியராஜன், சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் ஜப்பான் சென்றுள்ளனர். அவர்களை விமானநிலையத்திலேயே வரவேற்று 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு, உணவிலும் அவர்களுக்கு குறை வைக்காமல் தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும்வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார் நெப்போலியன். இதனிடையே தற்போது ஹல்தி கொண்டாட்டமும் சிறப்பாக நடந்துள்ளது.

nepoleon dhanoosh akshaya

உற்சாகத்தில் மணமக்கள்: ஹல்தியையொட்டி மணமக்கள் மட்டுமில்லாமல் நெப்போலியன் அவரது மனைவி ஜெயசுதா உள்ளிட்ட அனைவரும் மஞ்சள் நிறத்திலேயே ஆடைகளை அணிந்திருந்தனர். தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவரும் நலுங்கு வைத்தனர். மிகவும் கலர்ஃபுல்லாக இந்த நிகழ்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டோடியதையும் பார்க்க முடிந்தது. முன்னதாக மெஹந்தியும் அக்ஷயாவிற்கு போடப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தத்தின்போது தனுஷின் பெயரை தன்னுடைய கைகளில் மெஹந்தியாக அக்ஷயா போட்டிருந்தார்.

nepoleon dhanoosh akshaya

அக்ஷயா கைகளில் தனுஷ்: இந்நிலையில் தற்போது தன்னுடைய கைகளில் தனுஷின் உருவத்தை அக்ஷயா மெஹந்தியாக போட்டிருந்தார். ஒரு கையில் தனுஷும் மற்றொரு கையில் தன்னுடைய உருவத்தையும் அவர் மெஹந்தியாக போட்டிருந்தார். இது மிகச்சிறப்பாக வந்திருந்தது. முன்னதாக தனுஷ், அக்ஷயா உள்ளிட்டவர்களுடன் கலா மாஸ்டர் கலகலப்பாக பேசியதையும் பார்க்க முடிந்தது. இதன்போது அக்ஷயாவிடம் பிடித்த குணம் குறித்து தனுஷிடம் கேட்கப்பட்ட அதற்கு அவர் அனைவரிடமும் சிறப்பாக பழகும் குணம் பிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேபோல தனுஷ் சிறப்பாக co-operate செய்வதாக அக்ஷயா பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X