திருமணத்திற்கு போட்ட கண்டீஷன்.. அக்ஷயாவிடம் லவ் பிரபோசல்.. வெளியான தனுஷின் சேட்டைகள்!

டோக்கியோ: நடிகர் நெப்போலியன் -ஜெயசுதா தம்பதியின் மூத்த மகன் தனுஷ் மற்றும் நெல்லையை சேர்ந்த அக்ஷயாவின் திருமணம் சுற்றமும் நட்பும் சூழ மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் வாழ்த்த நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹல்தி, சங்கீத், மெஹந்தி என ஒவ்வொரு கொண்டாட்டமும் சிறப்பாக களைகட்டியது.

இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்தும் பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். செட்டிநாடு சமையலின் வாசல் ஜப்பானில் இண்டு இடுக்கெல்லாம் வீசியதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய மகனின் உடல்நலனுக்காக தன்னுடைய சிறப்பான கேரியரை தூக்கி உதறிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியனுக்கு இந்த திருமணம் நெகிழ்ச்சியை மட்டுமில்லாமல் ஆனந்த கண்ணீரையும் வரவழைத்தது.

nepoleon dhanoosh akshaya

நடிகர் நெப்போலியன்: நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ள நிலையில், அவர்களை தன்னுடைய இரு கண்களாகவே அவா பாவித்து வருகிறார். அதிலும் சிறு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷின் சிகிச்சைக்காக நெப்போலியன், தன்னுடைய சினிமா, அரசியல் அனைத்தையும் உதறிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அமெரிக்க சிகிச்சை தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுக்க, அங்கேயே செட்டில் ஆன நெப்போலியன், தனியாக தனுஷ் பெயரிலேயே சாப்ட்வேர் பிசினசையும் துவங்கி never ever give up மோடில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்.

தனுஷ்-அக்ஷயா திருமணம்: கடந்த சில மாதங்களாகவே நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம்தான் பேசு பொருளாக இருந்தது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சேரிலேயே அடைக்கலமாகியுள்ள இவருக்கு திருமண வாழ்க்கை சாத்தியமா, ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி பணயம் வைக்கிறார்களே, பணமிருந்தால் எல்லாம் சாத்தியமே என்பது போன்ற அடுத்தடுத்த விமர்சனங்களை தனுஷ் -அக்ஷயாவின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலேயே அனைவரும் பேசினர். இந்த திருமணத்திற்கு சம்மதன் தெரிவிக்க அக்ஷயாவிற்கு கோடிக்கணக்கான சொத்துக்களை நெப்போலியன் எழுதி வைத்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.

நெப்போலியன் ஆனந்த கண்ணீர்: ஆனால் இவற்றையெல்லாம் உடைத்து தற்போது தனுஷ் -அக்ஷயா திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய மகனின் விருப்பத்திற்காக ஜப்பானில் இந்த திருமணத்தை அனைவரும் வியக்கும்வகையில் நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன். இந்த திருமணத்தில் அக்ஷயாவின் முகத்தில் உற்சாகம், மகிழ்ச்சி, வெட்கம் அனைத்தும் கரைபுரண்டோடியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து தன்னுடைய குலசாமி அக்ஷயா என நெப்போலியன் கூறிய நிலையில், அதையும் மகிழ்ச்சியாகவே எதிர்கொண்டார் அக்ஷயா. இந்நிலையில் திருமணத்தையடுத்து தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் பேட்டி கொடுத்துள்ளன. இதை நடிகை சுஹாசினி எடுத்துள்ளார்.

தனுஷ் போட்ட கண்டீஷன்: கடந்த மே மாதத்தில் தனுஷ் ஈ-மெயில் மூலமாக தன்னிடம் பிரபோஸ் செய்ததாக அக்ஷயா உற்சாகம் தெரிவித்துள்ளார். இதற்கு தான் உடனடியாக பதிலளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவருக்கொருவர் பாடல்களை டெடிகேட் செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், இனிமேல் செய்வோம் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இருவரும் ஒருவரையொருவர் பேசி என்றே அழைத்துக் கொள்கின்றனர். இதனிடையே, தென்னிந்திய உணவு வகைகள் தனுஷிற்கு மிகவும் பிடிக்கும் என்பதால், பெண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரிய வேண்டும் என்பதே தன்னுடைய முதல் கண்டீஷனாக இருந்ததாக தனுஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X