தல அஜித் அனுபவித்த நெப்போடிஸம்..ஷாக்கிங் போட்டோ..நொறுங்கிய ரசிகர்கள் !

சென்னை : இப்போது உள்ள அவசரகால சூழ்நிலையில் கொரானா நோய்த் தொற்று ஒருபக்கம் நம் அனைவரையும் சோதித்து வரும் நிலையில், மறுபக்கம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அனைவரையும் உலுக்கி வருகிறது.

Recommended Video

V-CONNECT | ACTOR NATTY NATARAJ CHAT | BOLLYWOOD இல் திறமையைத்தான் பாக்குறாங்க | FILMIBEAT TAMIL

சுஷாந்த் சிங் மன அழுத்தம் கொடுக்கப்பட்டு பின் தற்கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்கு நெப்போடிசம் என்ற சினிமா வாரிசு அரசியல் தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் வளரும் காலங்களில் இதுபோன்ற நெப்போடிசதால் பாதிக்கப்பட்டுள்ளார் என இதனை நிரூபிக்கும் விதமாக ஒரு போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வளரவிடாமல் ஆப்பு

வளரவிடாமல் ஆப்பு

பாலிவுட் திரைத்துறையில் நெப்போடிசம் என்ற திரைத்துறை வாரிசு அரசியல் தலைவிரித்தாடும் நிலையில் ஒட்டுமொத்த திரைத்துறையையும் முன்னணி நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் இருக்கும் ஒரு சிலர் தங்கள் கையில் வைத்துக்கொண்டு வளரும் கலைஞர்களை வளரவிடாமல் ஆப்பு வைப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.

வழக்குகளும் போடப்பட்டு

வழக்குகளும் போடப்பட்டு

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் கரண் ஜோகர், அலியா பட், சல்மான் கான் போன்ற பல உச்ச நட்சத்திரங்களின் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீது பல வழக்குகளும் போடப்பட்டு ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தலயின் ரசிகர்கள்

தலயின் ரசிகர்கள்

வளரும் கலைஞர்கள் இயல்பாகவே சந்தித்து வரும் இதுபோன்ற பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் நடந்திருக்கின்றது அதுவும் நம்ம தல அஜித் குமாருக்கு நடந்திருக்கிறது என தலயின் ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சுட்டிக்காட்டி வருகின்றனர்.

2வது கதாநாயகனாக

2வது கதாநாயகனாக

நடிகர் அஜித்குமார் வளரும் கலைஞராக இருந்தபோது எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து வந்தார். விஜய், பிரசாந்த், கார்த்திக் என அனைவரின் படங்களிலும் இரண்டாவது கதாநாயகனாக நடித்து இருந்தார்.

தலை குனிந்தவாறு

தலை குனிந்தவாறு

இன்னிலையில் அஜித் மற்றும் பிரசாந்த் இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்கு பிரஷாந்திற்கு மட்டும் மாலை மரியாதை என அனைத்தும் கொடுக்கப்பட்ட நிலையில் அஜித் அந்த இடத்தில் தலை குனிந்தவாறு நின்று கொண்டிருந்த அந்த போட்டோவை பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் நொறுங்கிப் போய் உள்ளனர்.

நெப்போடிசம் தான்

நெப்போடிசம் தான்

சமகாலத்தில் ஒரே நேரத்தில் அறிமுகமான இரண்டு நடிகர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் அதில் ஒருவரை மட்டும் மாலை மரியாதையுடன் நடத்தி மற்றொருவரை சரியாக உபசரிக்காமல் இருந்ததும் ஒரு வகையான நெப்போடிசம் தான் என அஜித்தின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களின் குற்றச்சாட்டு

ரசிகர்களின் குற்றச்சாட்டு

மேலும் நடிகர் பிரசாந்த் மிகப் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனரின் மகன் என்பதால் அந்த இடத்தில் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டதாகவும். நடிகர் அஜித் எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தவர் என்ற வகையில் அவருக்கு அங்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

இணைந்து நடித்திருந்தனர்

இணைந்து நடித்திருந்தனர்

இந்நிலையில் பிரசாந்த் மற்றும் அஜித் இருவரும் கல்லூரி வாசல் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடிகர் அஜித்தும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நெப்போடிசதால் பாதிக்கப்பட்டு தலைகுனிந்து உள்ளார் என வேதனையுடன் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X