ஹெட்போன்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு போனி கபூர் கொடுக்கப்போகும் விருந்து!
சென்னை: அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று மாலை போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான படம் பிங்க். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் நேர்கொண்ட பார்வையாக வெளிவருகிறது.
இந்தப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ரங்கராஜ் பாண்டே நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதம் ரிலிஸாகும் என தெரிகிறது. இந்தப்படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியானது.

இன்று லிரிக்கல் வீடியோ
இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்தது. இந்நிலையில் இன்று மாலை படத்தின் மற்றொரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
மாலை 6.45 மணிக்கு
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டியுள்ளார். அதில் உங்களது ஹெட்போனை தயாராக வைத்திருங்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் இடிஎம் பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு விருந்து
நேற்று நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் பிகில் படம் குறித்த அப்டேட் வெளியானது. இந்நிலையில் நடிகர் அஜித் படத்தின் அப்டேட்டை அறிவித்து ரசிகர்களுக்கு படக்குழு இன்று மாலை விருந்தளிக்கிறது.


Click it and Unblock the Notifications











