அஜீத் ரசிகர்களுக்கு என்னை பார்த்தா வெறுப்பு வரும் - ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சென்னை: ரசிகர்கள் என்னை வெறுக்கும் அளவுக்கு நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டதால் என் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தேன் என்று நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த விக்ரம்-வேதா படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த போதும், அவருக்கு அந்த படங்களின் கதைகள் எதுவும் பிடிக்க வில்லையாம்.

Ner Konda Paarvai Shraddha Srinath Interview

தனக்கு கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று காத்திருந்த இந்த நடிகைக்கு கிடைத்த படம் தான் நேர் கொண்ட பார்வை. தல அஜீத் என்றால் சும்மா வா. அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்கு இவர் மட்டுமா விதிவிலக்கு. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து வெளிவர தயாரான நிலையில் உள்ளது.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்ட போது, தன் அனுபவத்தை பகிர்ந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். நேர் கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்காக தொலைபேசியில் அழைத்தனர். இதற்காக ஆடிசன் கூட வைத்தனர். ஆடிசன் முடிந்து பல நாட்கள் ஆகியும் யாரிடம் இருந்தும் எந்த விபரமும் தெரியவில்லை . மூன்று வாரம் கழித்து மீண்டும் அழைத்தனர் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.

அதன் பிறகு இயக்குனர் வினோத் என்னிடம் வந்து இந்த காட்சியில் நீங்கள் நடிக்கும் போது ரசிகர்கள் உங்களை வெறுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கூறினார் .அவர் கூறியது வித்தியாசமாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது.

அதன் பிறகு என்னுடைய முழு திறமையையும் ,வெளிப்படுத்தி நடித்தேன். அதன் பின்பே நேர் கொண்ட பார்வை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தல அஜித்துடன் நடித்த அனுபவம் மிகவும் அற்புதமானது. அவர் மிகவும் நல்ல மனிதர் என்றும் கூறினார்.

அடுத்ததாக விஷாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். மாதவனுடன் மாறன் படத்திலும் நடிக்கிறேன். இப்போதெல்லாம் நான் ரொம்ப பிஸி தெரியுமா என்று கூறினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் நடித்து வெளிவர போகும் படத்திற்காக அவரின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X