Ner Konda Paarvai Box Office Collection: அம்மாடியோ.. ரெண்டே நாளில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.
சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ.26 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி, நேர்கொண்ட பார்வை முதல் நாளில் தமிழகத்தில் முழுவதும் ரூ.16 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது. சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் ரூ. 1.58 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையை படைத்தது.

வசூல் நிலவரம்:
இந்நிலையில் படத்தின் 2வது நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் இரண்டாவது நாளில் ரூ.1.17 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டு நாட்களையும் சேர்த்து ரூ.2.75 கோடி வசூல் செய்துள்ளது.

கர்நாடகா:
தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளில் ரூ.10 கோடிக்கு மேல் படம் வசூல் செய்துள்ளது. இதனால் இரண்டு நாட்களில் மொத்த வசூல் ரூ.26 கோடியை தாண்டியுள்ளதாகக கூறப்படுகிறது. ரிலீசான இரண்டு நாட்களில் கர்நாடகாவில் மட்டும் ரூ.1.60 கோடி வசூலித்துள்ளது படம்.

கேரளா வசூல்:
கேரளாவில் கனமழை பெய்து வருவதால், அங்கு வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நல்ல வசூல் செய்து வருகிறது நேர்கொண்ட பார்வை. இந்திய ரூபாயின்படி அமெரிக்காவில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரூ 1.44 கோடிக்கும் மேல் வசூல் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி:
இதற்கிடையே படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டது. அதையும் தாண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டமும், வசூலும் குறையவில்லை. தொடர்ந்து வசூலில் இப்படம் சாதனை புரிந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











