Nerkondapaarvai: சென்னை பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை, தமிழக வசூல் எத்தனை 'சி' தெரியுமா?

By Siva

Recommended Video

Nerkonda paarvai review | நேர்கொண்ட பார்வை படத்தில் என்ன இருக்கு, இல்லை?

சென்னை:நேர்கொண்ட பார்வை படம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ. 1.58 கோடி வசூல் செய்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நேற்று வெளியானது. இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் நேர்கொண்ட பார்வைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Nerkonda Paarvai collection detail is here

இந்தியா மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியுள்ளது.

நேர்கொண்ட பார்வை சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் நேற்று ரூ. 1.58 கோடி வசூல் செய்துள்ளது. 2019ம் ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளே சென்னை பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது நேர்கொண்ட பார்வை.

மேலும் தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ. 26 கோடி வசூலித்துள்ளது. விடுமுறை அல்லாத நாளில் வெளியான அதுவும் ரீமேக் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் வார இறுதி நாட்களில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படம் அமெரிக்காவில் ரிலீஸான நாளில் ரூ. 10 லட்சம் வசூலித்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் இது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று புகழ்ந்து பேசியது பெரிதும் உதவுகிறது. சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை முதலிடத்தில் உள்ளது.

தனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் அஜித் இந்த படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டாதவர்களே இல்லை. அஜித் துணிந்து எடுத்த ரிஸ்க் பலனளித்துவிட்டது. ஒரு பெரிய ஹீரோவை வைத்து சமூக அக்கறை கொண்ட படத்தை எடுத்தால் மக்கள் நிச்சயம் கேட்பார் என்கிற தயாரிப்பாளர் போனி கபூரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X