Nerkonda Paarvai:செம படம்.. தல ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து..நேர்கொண்ட பார்வை முதல் விமர்சனம்!

நேர்கொண்ட பார்வை திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான விருந்து என பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நேர்கொண்ட பார்வை படம் பற்றிய முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.

Nerkonda parvai first review: A treat for Thala fans

வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமை பெற்றவர்கள் யார் என்ற விவரத்தை தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் சில சினிமா பிரபலங்களுக்கு மட்டும் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன், படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "தயாரிப்பாளர் போனி கபூர் எங்களுக்காக நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டார். அதற்காக அவருக்கு நன்றி. சிறந்த படம். தல ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து", என குறிப்பிட்டுள்ளார்.

படம் குறித்த முதல் விமர்சனமே நன்றாக வந்துள்ளதால் அஜித் ரசிகர்களும், படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. பல தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X