நேர்கொண்ட பார்வை ரிலீஸான வேகத்தில் கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் நேற்று ரிலீஸானது. பிங்க் இந்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. விடுமுறை அல்லாத நாளில் வெளியானபோதிலும் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

நேர்கொண்ட பார்வை
பலர் கல்லூரிகள், அலுவலகங்களுக்கு லீவு போட்டுவிட்டு படம் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ரிலீஸான முதல் நாளே அதை ஆன்லைனில் அதுவும் நல்ல பிரிண்ட்டில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். இதனால் வார இறுதிநாட்களில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ்
தெலுங்கில் ஐஸ்மார்ட் ஷங்கர் என்கிற படம் அண்மையில் ரிலீஸானது. அந்த படத்தை பார்த்த விமர்சகர்கள் இதெல்லாம் ஒரு படமா என்று காரித் துப்பினார்கள், தமிழ் ராக்கர்ஸும் கசியவிட்டது. ஆனால் இந்த இரண்டாலும் படத்தின் வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. அதாவது என்ன தான் படம் தமிழ் ராக்கர்ஸில் வந்தாலும் அதை தியேட்டரில் பார்க்க மக்கள் தவறுவது இல்லை. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தயாரிப்பாளர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

தயாரிப்பாளர்கள்
தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசத்திற்கு முடிவு கட்டுகிறேன் என்று மார்தட்டியவர் அந்த பொறுப்பை கை மாற்றிவிட்டு அவர் வேலையை மட்டும் பார்க்கச் சென்றுவிட்டார். கேட்க ஆள் இல்லாத காரணத்தால் தமிழ் ராக்கர்ஸ் எந்த புதுப்படம் வந்தாலும் உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிட்டு பணம் போட்ட தயாரிப்பாளர்கள் தலையில் இடியை இறக்கிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள்
முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் ரசிகர்கள் அதை எப்படி ஏற்கப் போகிறார்களோ என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கவலைப்பட்ட காலம் போய் எந்த நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் கசியவிடுவார்களோ என்று அஞ்சும் காலம் வந்துவிட்டது. திரையில் எப்பேர்பட்ட திருடனையும் கண்டுபிடிக்கும் ஹீரோக்களால் நிஜத்தில் இந்த திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











