நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதியில் மாற்றம்: காரணம் பிரபாஸ்?

By Siva

சென்னை: பிரபாஸின் சாஹோ படத்தால் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் நடித்துள்ள ஆக்ஷன் படம் சாஹோ. சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Nerkonda Paarvai release date to be changed

இந்நிலையில் வெளியான சாஹோ பட ட்ரெய்லரை பார்த்தவர்கள் அந்த பிரமாண்டத்தால் அசந்துவிட்டனர். ட்ரெய்லருக்கே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் படத்திற்கு சொல்லவா வேண்டும்.

பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு பிரபாஸ் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அதனால் அவரின் சாஹோ படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாஹோ பட ரிலீஸால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.

நேர்கொண்ட பார்வையும், சாஹோவும் 5 நாட்கள் இடைவெளியில் வெளியானாலும் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார்களாம். அதனால் நேர்கொண்ட பார்வை படத்தை முன்கூட்டியே ஜூலை மாதமே ரிலீஸ் செய்ய ஆலோசனை நடத்தி வருகிறாராம் தயாரிப்பாளர் போனி கபூர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படம் அஜித்துக்கு மட்டும் அல்ல போனி கபூருக்கும் ஸ்பெஷலான படம். காரணம் இது மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொல்லி எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும். ஸ்ரீதேவி மீது அஜித் மிகுந்த மரியாதை வைத்துள்ளதால் தான் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார்.

அப்படி ஸ்பெஷலான படத்தை பார்த்து பார்த்து ரிலீஸ் செய்ய விரும்புகிறார் போனி கபூர். அதில் தவறு எதுவும் இல்லை. எப்படி நேர்கொண்ட பார்வை படம் மூலம் வித்யா பாலன் கோலிவுட் வருகிறாரோ அதே போன்று சாஹோ படம் மூலம் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

சாஹோ மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட அதே ஆகஸ்ட் மாதம் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படமும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காப்பான் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X