twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்துக்கு ஒரு ஹிட் பார்சல்: நேர்கொண்ட பார்வை விமர்சனம்

    By Siva
    |

    Recommended Video

    Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

    சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. பிங்க் இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில் படம் பார்த்தவர்கள் அது குறித்து என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

    அஜித்

    அஜித் ரசிகர்களுக்காகவே நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டை காட்சி வைத்தார் வினோத். அவர் எதிர்பார்த்தது போன்றே அந்த காட்சி தல ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் யாரையும் அடித்து, துவைத்து எடுக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்பார்ப்பு

    அஜித் போன்ற பெரிய ஹீரோ சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்று நினைத்து தான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள நேர்கொண்ட பார்வை படத்தை எடுத்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அஜித்தின் நடிப்பை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். யுவனின் பிஜிஎம் படத்திற்கு பெரிய பலம். இது தல ரசிகர்கள் மட்டும் அல்ல அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

    ஹிட்

    அஜித்தின் சிறந்த படங்களில் நேர்கொண்ட பார்வையும் ஒன்று என்கிறார்கள் ரசிகர்கள். அவர் படத்தில் நடிக்கவில்லை கதாபாத்திரமாகவே மாறிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. அஜித்துக்கு இந்த ஆண்டின் இரண்டாவது பிளாக்பஸ்டர் இது என்பதில் தல ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை. ரீமேக் என்றாலும் அதை அழகாக எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக அக்கறை

    தல ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தை கொண்டாடுகிறார்கள். மாஸ், வெறித்தனம், தல நடிப்பு வேற லெவல் என்கிறார்கள். பன்ச் வசனம் இல்லை, பந்தா இல்லை ஆனாலும் அஜித் அனைவரையும் ஈர்க்கிறார்.

    English summary
    Ajith's Nerkonda Paarvai has got positive repsonse from the theatre goers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X