நேர்கொண்ட பார்வை: ட்ரெய்லரிலேயே கெத்து காட்டும் அஜித்
Recommended Video
சென்னை: அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்காக அவர்கள் வெளியிட்ட போஸ்டரே மாஸாக இருந்தது.

அறிவித்தபடியே படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லரில் வரும் முதல் வசனமே 'ஆர் யூ எ வெர்ஜின்', நீங்க கன்னித்தன்மையுடன் இருக்கீங்களா இல்லையா என்று அஜித் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து கேட்பது தான். நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடப்பதை தான் பெரிதாக காட்டியுள்ளார்கள்.
நிறைய நிறைய நிறைய... அப்படி எல்லம் நடக்காது, நடக்கவும் கூடாது என்று அஜித் கூறுகிறார். அஜித் ஒருவரை அடித்துவிட்டு கோபத்துடன் நிற்பதுடன் ட்ரெய்லர் முடிகிறது.
பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் வினோத் கதையில் மாற்றம் செய்துள்ளது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. அஜித் ரசிகர்களை திருப்திபடுத்த மாஸ் காட்சிகளை சேர்த்துள்ளார் வினோத்.
அஜித் வெள்ளைத் தாடி, மீசையுடன் வந்தாலும் கெத்தாகத் தெரிகிறார். ட்ரெய்லரில் வித்யா பாலனை காட்டவில்லை. இந்தி படத்தை போன்று இல்லாமல் இதில் வித்யா பாலன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனாலோ என்னவோ ட்ரெய்லரில் காட்டாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
எது எப்படியோ, நேர்கொண்ட பார்வை விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











