நேர்கொண்ட பார்வை.. வக்கீல் அஜித்துக்கு இப்படி ஒரு சூப்பர் தமிழ் பெயரா.. தெறிக்க விடுறாங்களே!
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் என்ன என்பது பற்றிய தகவல் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் பெயர் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அஜித் மற்றும் பிற கதாபாத்திரங்களின் பெயர்கள் இவை தான் என சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகியுள்ளது.
நீதி தேவன்:
அப்பதிவில் அஜித், நீதிதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு மனைவியாக நடிக்கும் வித்யாபாலன் குணவதி தேவன் என்ற பெயரில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரங்கராஜ் பாண்டே தயாளன் என்ற பெயரிலும், ஷ்ரதா ஸ்ரீநாத் மீரா என்ற பெயரிலும், ஆதிக் ரவிச்சந்திரன் ஷிவ்ராஜ் என்ற பெயரிலும் நடித்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் யூகம்:
இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லையென்றாலும், இந்தப் பதிவை அஜித் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்து வருகிறார். எனவே, அவரது கதாபாத்திரத்திற்கு நீதிதேவன் எனப் பெயர் வைத்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

தள்ளிப் போன ரிலீஸ்:
கூடவே, நேர் கொண்ட பார்வை படம் பற்றிய அப்டேட்டுகளைக் கேட்டு புதிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, அதனை டிரெண்டிங்காக்கி வருகின்றனர். முதலில் இப்படம் இம்மாதம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சிலப்பல காரணங்களால் அது ஆகஸ்ட்டிற்கு தள்ளிப் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் ஆர்வம்:
அஜித்தின் பட அறிவிப்புகளை திருவிழாக்கள் போல கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம். எனவே, படக்குழு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பை தராவிட்டாலும், சிலர் தாங்களாகவே டிசைன் செய்த போஸ்டர், படத்தலைப்பு போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இது யாரோ ஒரு ரசிகர் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











