3 ஸ்கிரிப்ட் வச்சிருக்கேன்.. தல இந்தி படத்திலும் நடிக்கணும்: ஸ்ரீதேவி கணவரின் பேராசை!

அஜித் இந்திப் படங்களிலும் நடிக்க வேண்டும் என போனிகபூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

நடிகர் அஜித் இந்தி படங்களிலும் நடிக்க வேண்டும் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் போனிகபூர் விருப்பம்

சென்னை: நடிகர் அஜித் இந்தி படங்களிலும் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியில் அமிதாப் நடித்த வெற்றிப் படமான பிங்க், தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகி வருகிறது. போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித் நாயகனாக நடித்து வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

சிறப்பான நடிப்பு:

சிறப்பான நடிப்பு:

இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர், தனது டிவிட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் பற்றியும், அஜித் பற்றியும் டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நேர்கொண்ட பார்வை படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். அதில் அஜித்தின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார்.

போனிகபூரின் ஆசை:

போனிகபூரின் ஆசை:

மேலும், ‘விரைவில் அஜித் இந்திப் படங்களில் நடிப்பார் என நம்புகிறேன். அவருக்காக மூன்று கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என நம்புகிறேன்'எனத் தெரிவித்துள்ளார்.

நட்பு:

நட்பு:

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூருக்கும், அஜித்துக்கும் சினிமாவைத் தாண்டியும் நட்பு உள்ளது. இதன் காரணமாகவே அவர் போனிகபூரின் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார்.

ஆச்சர்யம் இல்லை:

ஆச்சர்யம் இல்லை:

பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிப்பது சரிப்பட்டு வராது என கலவையான விமர்சனங்கள் உள்ள நிலையில், ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அவர் அப்படத்தை ஒப்புக் கொண்டார் என்ற பேச்சு உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், போனிகபூரின் விருப்பத்தை ஏற்று அவர் இந்திப் படங்களில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X