Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Nerkonda Parvai: ஒரு வழியாக ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு.. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை!
நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாகிறது.
சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் அடுத்தமாதம் 8ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை போனி கபூர் திடீரென வெளியிட்டார். இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.