Nerkonda parvai: அஜித்தின் நேர்கொண்ட பார்வை... ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
சென்னை: அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் நேர் கொண்ட பார்வை. அஜித் நடிக்கும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications