'தல' படத்துக்கு முதல் நாளே இப்படி ஒரு சோதனையா... யார் அந்த கருப்பு ஆடுன்னு தெரியலையே..!

நேர்கொண்ட பார்வை படத்தின் முக்கிய காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளது.

Recommended Video

Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் நாளே பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

இந்தியில் அபிதாப், டாப்சி நடித்து ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் அஜித்தை ஹீரோவாக வைத்து நேர்கொண்ட பார்வை படமாக உருவாக்கியிருக்கிறார் எச்.வினோத். இந்த படம் தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Nerkonda Parvai scenes leaked in social medias

கடந்த திங்கட்கிழமை அன்று நேர்கொண்ட பார்வை திரைப்படம் சிங்கப்பூரில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளது. வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.

சிங்கப்பூரில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியின் போது இந்த காட்சிகள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் கசியவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்த காட்சிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X