தல ரசிகாஸ்...வெயிட் பண்ணினது போதும்... நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வந்தாச்சு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்தபடி வெளியிட்டுள்ளனர்.

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ்பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

Nerkondaparvai trailer is releasing today 6pm

பர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தவிர இப்படத்தின் அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது அது வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவீட்டில், 'காத்திருந்தது போதும். இன்று மாலை நேர்கொண்ட பார்வை டிரெய்லர் ரிலீசாகிறது' என அவர் தெரிவித்தார். அறிவித்தபடி ட்ரெய்லரை சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளனர்.

அஜித் பட அறிவிப்புகள் எல்லாவற்றையுமே திருவிழாவாகக் கொண்டாடுவது அவரது ரசிகர்கள் வழக்கம். அந்தவகையில் நிச்சயம் நேர்கொண்ட பார்வை டிரெய்லரையும் உலகளவில் டிரெண்டிங் ஆக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X