லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கிவா முத்தமிடாதே!.. அக்.-31ல் ரிலீஸ்!!

By Mayura Akilan

ஆரோகணம்' படத்தைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே'. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அவர் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக சபீர், நாயகிகளா பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ளனர். மேலும் விஜி சந்திரசேகர், தம்பி ராமையா, ஏ.எல்.அழகப்பன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு வினோத்ராஜ். இந்தப் படம் ஒரு நெடுஞ்சாலையில் செல்லும் லாரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

நாலு கதை உள்ள படம்

நாலு கதை உள்ள படம்

இந்த படத்தை ஒரு குவாலிட்டியான கமர்சியல் படமாக இயக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்துல நாலு கதை இருக்கு.. ஒரு க்ரைம், செண்டிமென்ட், காமெடி, சீரியஸ்ன்னு ஒரு கலவையாக இயக்கியிருக்கேன் என்றும் கூறினார்.

லாரியின் வாசகம்

லாரியின் வாசகம்

இந்த படத்தின் டைட்டீல் ஒரு மாதிரி ரொமான்ஸாத்தான் தெரியும். ஆனா லாரியை மையமாகக் கொண்ட கதைன்றதால சில லாரிகளின் பின்னால் எழுதியிருக்கும் வாசகமான ‘நெருங்கி வா முத்தமிடாதே' என்பதை டைட்டிலா வைத்துள்ளேன் என்றார்.

திருச்சி - காரைக்கால்

திருச்சி - காரைக்கால்

நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு நாலு நாளைக்கு பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டால் நாட்டு நிலைமை என்னாகும்..? திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு போற லாரி, வழக்கமா நாலு மணி நேரத்துக்குள்ள போய்ச் சேரணும்... ஆனா இந்தப் படத்துல அதுக்கு பதினாலு மணி நேரம் ஆகுது. ஏன்...? இதைத்தான் கொஞ்சம் விறுவிறுப்பா சொல்லியிருக்கேன் என்றும் கூறினார்.

லட்சுமியின் ஆதங்கம்

லட்சுமியின் ஆதங்கம்

குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் எடுத்தால் இங்கு மரியாதையே இல்லை.. நிறைய செலவு செய்து மிகப் பெரிய பட்ஜெட்டில் செய்தால்தான் அவரை இயக்குநர்கள் என்கிறார்கள். எனவேதான் இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளேன் என்றும் கூறினார்.

65 நாளில் முடித்தேன்

65 நாளில் முடித்தேன்

இந்தப் படத்தோட ஷூட்டிங்கை 75 நாள்ல முடிக்கிறேன்னு தயாரிப்பாளிடம் சொல்லியிருந்தேன். ஆனா 65 நாள்லயே முடிச்சிட்டேன்.. லாரி... டிராவல்ன்னு நிறைய இடங்களுக்கு மாற வேண்டியிருந்ததால இத்தனை நாளாயிருச்சு.." என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பாடல் வெளியீடு

பாடல் வெளியீடு

‘நெருங்கி வா முத்தமிடாதே' திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் எப்.எம் ரேடியோ நிலையத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு முற்றிலும் முடித்துவிட்ட நிலையில், வரும் 31ஆம்தேதி படத்தை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

பரிசு காத்திருக்கு

பரிசு காத்திருக்கு

முழுக்க முழுக்க விறுவிறுப்பான திரைக்கதையை இந்த படத்தில் உபயோகித்து உள்ளதாகவும், அடுத்து என்ன காட்சி வரும் என்று படம் பார்ப்பவர்கள் ஊகிக்கவே முடியாது என்று தான் சவால் விடுவதாகவும் தனது சவாலை ஏற்று படத்தின் அடுத்த காட்சியை ஊகித்துவிட்டால் அதற்கு ஒரு பெரிய தொகை பரிசு தர தயாராக உள்ளதாகவும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.​

தைரியமான முடிவுதான்

தைரியமான முடிவுதான்

தீபாவளிக்கு வெளியான கத்தி, பூஜை, ஹேப்பி நியூ இயர் ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி தனது நெருங்கி வா முத்தமிடாதே' திரைப்படத்தை அவர் ரிலீஸ் செய்ய தைரியமாக முடிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X