நேசமணியை வைத்து இளையராஜாவை 'லைட்டா' கலாய்த்த அமுதன், விசித்ரா

By Siva

Recommended Video

Nesamani பற்றி ரமேஷ் கண்ணா சிரிப்பு பேச்சு | Ramesh kanna Exclusive Interview | வீடியோ

சென்னை: நேசமணியை வைத்து இளையராஜாவை லைட்டா கலாய்த்துள்ளனர் இயக்குநர் சி.எஸ். அமுதனும், நடிகை விசித்ராவும்.

நரேந்திர மோடி இந்திய பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற நாள் அன்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில் பேசப்பட்டவர் கான்டிராக்டர் நேசமணி. ட்விட்டர் டிரெண்டில் நேசமணி உலக அளவிலும், இந்தியா அளவிலும் மோடியை முந்திவிட்டார்.

Nesamani and Ilaiyaraja connection

யாருய்யா இந்த நேசமணி என்று பிற மாநிலத்தவர்கள் கதறியது எல்லாம் தனிக் கதை. மோடியையே ஓரங்கட்டியுள்ளார் என்றால் அந்த நேசமணி நிச்சயம் பெரிய லெஜண்டாகத் தான் இருக்க வேண்டும் என்று கான்டிராக்டரை யார் என்று தெரியாதவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த நேசமணி உலக அளவில் டிரெண்டானது குறித்து திரையுலக பிரபலங்களும் ட்வீட் போட்டனர்.

நேசமணிக்கு நியாயம் வேண்டும், அரசு வேலை வேண்டும், சுத்தியல் விழுந்தது குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமிஷன் வேண்டும் என்று தங்கள் பங்கிற்கு ட்வீட் போட்டு கலாய்த்தனர் திரையுலக பிரபலங்கள்.

இந்நிலையில் நேசமணிக்காக வாய்ஸ் கொடுத்த இருவர் சந்துகேப்பில் இசைஞானி இளையராஜாவையும் லைட்டா கலாய்த்துவிட்டனர். அதில் ஒருவர் நம் நக்கல் மன்னன் இயக்குநர் சி.எஸ். அமுதன். மற்றொருவர் நடிகை விசித்ரா.

நேசமணி குறித்து அமுதன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த விஷயத்துல என்னோட ஒரே கருத்து, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த ஒருவரின் தலையில் சுத்தியலை போடுவது சற்று ஆண்மை இல்லாத தனமாக தெரிகிறது என்றார். அமுதனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், என்ன சார் உங்களின் அடுத்த படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலரோ, இளையராஜா பாடல்களை கேட்டால் ஆண்மை போய்விடும் என்று கலாய்த்துள்ளனர்.

நேசமணி டிரெண்டானது குறித்து ரசிகர்கள் விசித்ராவிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் இதற்கு வடிவேலு சார் ராயல்டி கேட்காமல் இருந்தால் சரி என்று கலாய்த்துள்ளார்.

தற்போது யார் ஆண்மையில்லாத்தனம் என்று கூறினாலும் இளையராஜா தான் நினைவுக்கு வருகிறார். பிற இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். ராயல்டி விஷயத்தால் இளையராஜா விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X